பொன்னியின் செல்வனுடன் கைக்கோர்க்கும் கார்த்தியின் சர்தார்.. சிறப்பான பிரமோஷனுக்கு திட்டம்!
சென்னை : நடிகர் கார்த்தி வந்தியத்தேவனாக நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் நாளைய தினம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
சர்வதேச அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை இந்தப் படம் உருவாக்கியுள்ள நிலையில், படத்தின் ரிலீசுக்காக அனைவரும் காத்திருக்கின்றனர்.
இதனிடையே வரும் தீபாவளியையொட்டி கார்த்தியின் சர்தார் படமும் ரிலீசாக உள்ளது. பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக இந்தப் படத்தின் பிரமோஷனில் கார்த்தி பங்கேற்கவுள்ளார்.

நடிகர் கார்த்தி
நடிகர் கார்த்தியின் விருமன் படத்தின் வெற்றியை தொடர்ந்து நாளைய தினம் பொன்னியின் செல்வன் படம் ரிலீசாக உள்ளது.இந்தப் படத்தில் வந்தியத் தேவனாக நடித்துள்ளார் கார்த்தி. இந்தக் கேரக்டரில் முன்னதாக ரஜினிகாந்த், விஜய் போன்றோர் நடிக்கவிருந்தனர். அந்த முயற்சிகள் பலிக்காத நிலையில், தற்போது கார்த்திக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

வந்தியத்தேவன் கார்த்தி
இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார் கார்த்தி. படத்தின் டீசர், பொன்னி நதி பாடல், ட்ரெயிலர் போன்றவற்றில் அவரது மிரட்டலான நடிப்பை பார்க்க முடிகிறது. படத்தில் இவருக்கு மிகவும் அழுத்தமான கேரக்டர் என்பது இதில் தெரிகிறது. மேலும் படத்தின் பிரமோஷனிலும் சிறப்பான வகையில் பங்கேற்றுள்ளார் கார்த்தி.

ரசிகர்கள் உற்சாகம்
இந்தப் படம் நாளைய தினம் சர்வதேச அளவில் ரிலீசாக உள்ள நிலையில், டிக்கெட் புக்கிங்குகள் துவங்கப்பட்ட இடங்களில் எல்லாம் ரசிகர்கள் மிகச்சிறந்த வரவேற்பை கொடுத்துள்ளனர். அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுளிலும் படத்திற்கு சிறப்பான வரவேற்பு காணப்படுகிறது.

கார்த்தியின் சர்தார் படம்
இதனிடையே இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக கார்த்தியின் சர்தார் படம் தீபாவளியையொட்டி ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தில் கார்த்தி வயதான மற்றும் காவல் அதிகாரியாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். பிஎஸ் மித்ரன் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜிவி பிரகாஷ்.

திரையரங்குகளில் சர்தார் டீசர்
இந்தப் படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில் நாளைய தினம் படத்தின் டீசர், பொன்னியின் செல்வன் படத்தின் இடைவேளையின்போது திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் படத்திற்கு மிகச்சிறந்த வரவேற்பு காணப்படும் நிலையில், அதன் இடையில் சர்தார் படத்தின் டீசர் வெளியாகவுள்ளது மிகச்சிறந்த திட்டமாக கருதப்படுகிறது.

அடுத்தடுத்த வெற்றிகள்
கார்த்தியின் விருமன் படம் சமீபத்தில் வெளியாகி சிறப்பான வெற்றியை கொடுத்துள்ளது. இந்தப் படத்தில் கிராமத்து கெட்டப்பில் கார்த்தி நடித்திருந்தார். அதேபோல பொன்னியின் செல்வன், சர்தார் என 3 படங்களிலும் வித்தியாசமான கெட்டப்புகளில் கார்த்தி நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் படங்களும் அடுத்தடுத்து வெற்றியடைந்து கார்த்திக்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











