விரைவில் கார்த்தியின் சர்தார் படத்தோட டீசர், பர்ஸ்ட் சிங்கிள்.. அப்டேட் சொன்ன ரெட் ஜெயண்ட்!
சென்னை : நடிகர் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் சர்தார். தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் கார்த்தியின் விருமன் படம் ரிலீசாகி சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில், வரும் செப்டம்பர் 30ம் தேதி அவரது பொன்னியின் செல்வன் படம் ரிலீசாக உள்ளது.
இந்தப் படத்தில் வந்தியத்தேவன் என்ற சிறப்பு மிக்க கேரக்டரில் நடித்துள்ளார் கார்த்தி. முன்னதாக இந்த கேரக்டரில் ரஜினிகாந்த், விஜய் ஆகியோர் தேர்வாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் கார்த்தி
நடிகர் கார்த்தி தொடர்ந்து சிறப்பான பல படங்களை, வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். இவருக்கு எந்த கேரக்டர் என்றாலும் சிறப்பாக பொருந்துகிறது. சாக்லேட் பாய் கேரக்டர்களிலும் சிறப்பாக பொருந்துகிறார். மிடுக்கான போலீசாகவும், கிராமத்து கெட்டப்புகளில், நையாண்டிகளில், கைதியாக என அடுத்தடுத்த வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

பாராட்டுக்களை குவித்த விருமன் படம்
இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியானது விருமன். இந்தப் படத்தில் கிராமத்து கெட்டப்பில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். படத்தில் கார்த்திக்கு ஜோடியாகியிருந்தார் பிரபல இயக்குநர் ஷங்கரின் மகன் அதிதி ஷங்கர். இவர்களின் கெமிஸ்ட்ரி சிறப்பாக வொர்க் அவுட் ஆனது. மேலும் பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், சூரி என இந்தப் படத்தின் கேரக்டர்கள் களை கட்டியது. முத்தையா இயக்கத்தில் வெற்றிப்படமாகியுள்ளது விருமன்.

பொன்னியின் செல்வன் ரிலீஸ்
இந்தப் படத்தை தொடர்ந்து இந்த மாதம் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது பொன்னியின் செல்வன். வரலாற்றுக் காவியமாக மணிரத்னத்தின் கனவு படைப்பாக வெளியாகவுள்ள இந்தப் படத்தில் வந்தியத்தேவன் என்ற சிறப்பான கேரக்டரில் நடித்துள்ளார் கார்த்தி. முன்னதாக இந்தப் படத்தின் முயற்சிகள் நடைபெற்ற நிலையில், இந்தக் கேரக்டரில் ரஜினிகாந்த், விஜய் ஆகியோர் நடிக்கவிருந்தனர்.

பொன்னியின் செல்வன் பிரமோஷன் டூர்
தற்போது பொன்னியின் செல்வன் பிரமோஷனல் டூரில் கார்த்தி பங்கேற்கவுள்ளார். இவருடன் விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா உள்ளிட்டவர்களும் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படம் தமிழின் பிரம்மாண்ட படைப்பாக உருவாகியுள்ளது. சர்வதேச அளவில் இந்தப் படம் தமிழின் பெருமையை சொல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளிக்கு ரிலீசாகும் சர்தார்
இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக கார்த்தியின் நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்தார். தீபாவளியொட்டி இந்தப் படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் கார்த்தி. ஒரு கேரக்டரில் வயதான தோற்றத்திலும் காணப்படுகிறார். படத்தை பிஎஸ் மித்ரன் இயக்கியுள்ளார்.

விரைவில் டீசர் -பர்ஸ்ட் சிங்கிள்
இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகவுள்ளதாக ரெட் ஜெயண்ட் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளது. இந்தப் படத்தின் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை தொடர்ந்து போலீஸ் அதிகாரியாக கார்த்தி நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











