சிவகார்த்திகேயனா.. கார்த்தியா.. இந்த தீபாவளி வின்னர் யாரு? விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியகவும்!

சென்னை: சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் மற்றும் கார்த்தியின் சர்தார் என இரு படங்களும் ஒரே நாளில் இந்த தீபாவளி போட்டியாக மோதி உள்ளன.

அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் காமெடி படமாக வெளியாகி உள்ளது.

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படம் ஆக்‌ஷன் பிளஸ் கான்செப்ட் பேக்கட் மூவியாக ரிலீஸாகி உள்ள நிலையில், இந்த தீபாவளி வின்னர் யார் என்கிற கேள்வியும் இயல்பாகவே எழுகிறது.

பிரின்ஸ் பிக்கப் ஆகல

பிரின்ஸ் பிக்கப் ஆகல

இயக்குநர் அனுதீப் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் புதுவிதமாக உருவாகி உள்ள ஜாலியான படம் தான் பிரின்ஸ். விஜய், தனுஷை போலவே சிவகார்த்திகேயனுன் தமிழ், தெலுங்கு பைலிங்குவல் படம் பண்ண வேண்டும் என டோலிவுட் இயக்குநர் இயக்கத்தில் நடித்துள்ளார். ஆனால், ஜதி ரத்னலு படம் அளவுக்கெல்லாம் பிரின்ஸ் இல்லை என்கிற விமர்சனங்களே மிகப்பெரிய இடியாக பிரின்ஸ் படக்குழுவுக்கு விழுந்துள்ளது.

சாதித்ததா சர்தார்

சாதித்ததா சர்தார்

பிரின்ஸ் படத்துக்கு ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் கிளம்பிய நிலையிலேயே கார்த்தியின் சர்தார் திரைப்படம் பாதி கிணற்றை தாண்டி விட்டது. 8 மணிக்கு வெளியான அந்த படம் பிரின்ஸ் படத்தை விட பல மடங்கு பெஸ்ட் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

ஹாட்ரிக் ஹிட்

ஹாட்ரிக் ஹிட்

டாக்டர், டான் படங்களை தொடர்ந்து பிரின்ஸ் படமும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து சிவகார்த்திகேயனுக்கு ஹாட்ரிக் ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது மிஸ் ஆனதாகவே ரிப்போர்ட்டுகள் வருகின்றன. அதே சமயத்தில் விருமன், பொன்னியின் செல்வன் படங்களை தொடர்ந்து சர்தார் படத்தின் மூலம் கார்த்தி ஹாட்ரிக் ஹிட் அடித்து விட்டார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தீபாவளி வின்னர்

தீபாவளி வின்னர்

இந்த தீபாவளிக்கு வெளியான பிரின்ஸ் மற்றும் சர்தார் என இந்த இரண்டு தமிழ் படங்களில் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது கார்த்தியின் சர்தார் படம் தான். விமர்சன ரீதியாக பிரின்ஸ் படத்தை நல்லாவே கார்த்தியின் சர்தார் ஓவர்டேக் செய்து விட்டது என்றே சொல்லலாம்.

பாக்ஸ் ஆபிஸ்

பாக்ஸ் ஆபிஸ்

சர்தார் படத்திற்கு கிடைத்து வரும் பாசிட்டிவ் ரிப்போர்ட்கள் காரணமாக சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் தியேட்டர்கள் குறைக்கப்பட்டு சர்தார் படத்துக்கு சென்றால், ஆட்டோமேடிக்காக சர்தார் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சாதித்து விடும். ஆனால், முதல் நாளை பொறுத்தவரையில் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் அதிகாலை 5 மணிக்கே வெளியான நிலையில், அதிக வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி லீவ் இருப்பதால், ரசிகர்களுக்கு இரு படங்களுக்கும் ஆதரவு கொடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X