ஆஹா.. என்னவொரு அழகான தமிழ்ப் பெயர்.. "என் பிள்ளை கந்தன்".. நெகிழ்ந்து மகிழ்ந்த கார்த்தி!
சென்னை : நடிகர் சிவக்குமாரின் இரண்டாவது மகனான கார்த்தி, 2004 ல் மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து படத்தில் சிறிய வேடத்தில் நடித்ததன் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர். 2007 ல் அமீர் இயக்கிய பருத்திவீரன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
Recommended Video

முதல் படமே மெகா ஹிட் படமாக கார்த்திக்கு அமைந்து விட்டதால் அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார். தற்போது கார்த்தி நடித்து முடித்துள்ள சுல்தான் படம் ஏப்ரல் 2 ம் தேதி ரிலீசாக உள்ளது. மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் கார்த்தி நடிக்கிறார்.

கார்த்திக்கு 2011 ல் ரஞ்சனி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஏற்கனவே பெண் குழந்தை உள்ளது. இவருக்கு உமையாள் என பெயரிட்டுள்ளார் கார்த்தி. தற்போது தனக்கு மகன் பிறந்துள்ளதை வித்தியாசமான முறையில் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமிலும் கார்த்தி அறிவித்துள்ளார்.
பிஞ்சு குழந்தை கை நீட்டும் போட்டோவுடன்,
கண்ணா,
அம்மாவும், அக்காவும், நானும் உனக்கு மிக ஆசையாக "கந்தன்" என்று பெயர் சூட்டி இருக்கிறோம். உன் வருகையால், நம் சுற்றம் மேலும் இனிமையாகட்டும்.
அன்புடன்...
அப்பா.
என்ற வாசகத்தை கார்த்தி பதிவிட்டுள்ளார்.
கார்த்தியின் இந்த பதிவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அதிலும் இன்ஸ்டாகிராமில் கார்த்தி பதிவிட்ட 30 நிமிடங்களில் 22,000 பேர் லைக் செய்து, வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











