நூறு தலை ராவணன்.. தியேட்டர்களில் வசூல் வேட்டை ஆடும் சுல்தான்.. முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

சென்னை: இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் சுல்தான்.

பக்கா மாஸ் கமர்ஷியலாக உருவாகி உள்ள இந்த படத்தில் விவசாயம் தொடர்பான கருத்துக்களும் பேசப்பட்டுள்ளன.

அதிகாலை காட்சியில் ஆரம்பித்த சுல்தான் திரைப்படம் முதல் நாளே தியேட்டர்களில் வசூல் வேட்டை ஆடியுள்ளதாம்.

சக்சஸ் சுல்தான்

சக்சஸ் சுல்தான்

வித்தியாசமான திரைக்கதையை கொண்ட படமாக சுல்தான் வெளியாகவில்லை என்றாலும், ரசிகர்களை என்டர்டெயின் பண்ணும் விதமாக அதிரடியாக, கலக்கல் காமெடி மற்றும் கொஞ்சம் விவசாய கருத்துக்களுடன் படம் ரிலீசாகி உள்ளது என ஏகப்பட்ட விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். விமர்சன ரீதியாக பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும், வசூல் ரீதியாக இந்த படம் சக்சஸ் தான் என்கின்றனர்.

முதல் நாள் வசூல்

முதல் நாள் வசூல்

நடிகர் கார்த்தியின் சுல்தான் திரைப்படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 6 முதல் 8 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தொடர்ந்து விடுமுறை என்பதால், முதல் வார இறுதியில் 20 முதல் 25 கோடி ரூபாய் வரை சுல்தான் படம் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டோலிவுட்டில் குவியும் வசூல்

டோலிவுட்டில் குவியும் வசூல்

சுல்தான் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி உள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா. டோலிவுட்டில் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில் சுல்தான் திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலும் நல்ல வசூல் வேட்டையை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிக ஆக்‌ஷன் கலந்து படமும் தெலுங்கு படம் போல இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், அங்கேயும் வசூல் வேட்டை நடக்கும்.

ஒடிடி ரிலீஸ்

ஒடிடி ரிலீஸ்

மாஸ்டர் படத்தை போலவே இந்த சுல்தான் படமும் வெளியான சில நாட்களிலேயே ஒடிடியில் வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் ஏப்ரல் 17ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் சுல்தான் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிஜிட்டல் உரிமமும் நல்ல தொகைக்கு ஏற்கனவே விற்கப்பட்டுள்ளதாம்.

Recommended Video

SULTHAN Public opinion | Sulthan Review , karthi, Rashmika Mandanna | Sulthan Public Talk
கர்ணன் ரிலீஸ் வரை

கர்ணன் ரிலீஸ் வரை

மேலும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் அடுத்த வாரம் ஏப்ரல் 9ம் தேதி வெளியாகிறது. ஏப்ரல் 2ம் தேதி வெளியான சுல்தான் திரைப்படம் கர்ணன் ரிலீஸ் வரை எந்தவொரு தடையும் இன்றி அதிகளவிலான ஸ்க்ரீன்களில் வெற்றி நடை போடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழ் புத்தாண்டு வர உள்ள நிலையில், வரும் ஏப்ரல் 14 வரை திரையரங்குகளில் சுல்தான் வசூல் வேட்டை நடத்துவான் என்றே பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X