செம மிரட்டல்.. 100 தல ராவணனாம்.. அப்ளாஸை அள்ளும் சுல்தான் ட்ரெயிலர்!

சென்னை: கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.

ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் சுல்தான்.

இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இதன் மூலம் ராஷ்மிகா மந்தனா தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார்.

விவேக் - மெர்வின்

விவேக் - மெர்வின்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு இப்படத்தை தயாரித்துள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் சுல்தான் படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர்.
இப்படம் வருகிற ஏப்ரல் 2-ந் தேதி ரிலீசாக உள்ளது.

ட்ரெயிலர் ரிலீஸ்

ட்ரெயிலர் ரிலீஸ்

இந்நிலையில் இப்படத்தின் ட்ரெயிலர் லாஞ்ச் மற்றும் பிரஸ் மீட் இன்று காலை நடைபெற்றது. இதனை தொடர்ந்து படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது.

கொடுக்கல் வாங்கல்

கொடுக்கல் வாங்கல்

இதில் ஹீரோ கூட்டத்துக்கும் வில்லன் கூட்டத்துக்கும் உள்ள கொடுக்கல் வாங்கல் மையப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிகிறது. முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியை அடிப்படையாக கொண்டுள்ளது சுல்தான்.

பாவாடை தாவணியில்

ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சமில்லாமல் அடிதடி காட்சிகள் நிறைந்து காணப்படுகிறது. பாவாடை தாவணியில் கிராமத்து பைங்கிளியாக அசத்தியிருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. கார்த்திக்கும் ராஷ்மிகாவுக்கும் இடையிலான காதல் காட்சிகள் ட்ரெயிலரிலேயே பட்டைய கிளப்புகிறது.

100 தலை ராவணன்

100 தலை ராவணன்

அதோடு ட்ரெயிலரில் இடம்பெற்றுள்ள வசனங்களும் தீயாய் உள்ளது. அது ஒரு யானை கூட்டம் என்று ஆரம்பிக்கும் ட்ரெயிலரில் வெயிட்டான பல வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இறுதியாக கார்த்தி தன்னை 100 தலை ராவணன் என்று சொல்லிக் கொள்வதாக முடிகிறது சுல்தான் ட்ரெயிலர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X