கார்த்தி -அதீதி காம்பினேஷனில் ரிலீசான விருமன் 3வது நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்ஸ்.. சும்மா மிரட்டுதே!

சென்னை : நடிகர் கார்த்தி -அதீதி ஷங்கர் நடிப்பில் இரு தினங்களுக்கு முன்பு வெளியானது விருமன் படம்.

இந்தப் படத்தின் கதைக்களம் கிராமத்து மண்மணம் மாறாமல் எடுக்கப்பட்டுள்ளது. படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் முத்தையா.

இந்தப் படத்தின்மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார் நடிகை அதீதி ஷங்கர். படத்தில் அவர் ஒரு பாடலையும் பாடியுள்ளார்.

கார்த்தியின் விருமன் படம்

கார்த்தியின் விருமன் படம்

நடிகர் கார்த்தி சுல்தான் படத்திற்கு பிறகு நடித்து வெளியான படம் விருமன். இந்தப் படத்தில் இயக்குநர் முத்தையாவுடன் கொம்பன் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக கார்த்தி இணைந்தது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த எதிர்பார்ப்பை தற்போது விருமன் படம் பூர்த்தி செய்துள்ளது.

ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம்

கடந்த வெள்ளிக்கிழமை இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசான நிலையில் தற்போது ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடி வருகின்றனர். படத்திற்கான விமர்சனங்களும் மற்றும் வசூலும் சிறப்பாக காணப்படுகிறது. இரவுக்காட்சிகளும் அதிகமான திரையரங்குகளில் அதிகப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

கார்த்தியின் கேரக்டர்

கார்த்தியின் கேரக்டர்

இந்தப் படத்தில் குடும்ப உறவுகள் சிறப்பாக கையாளப்பட்டுள்ளது. தன்னுடைய தாயின் இறப்பிற்கு காரணமாக அமையும் தந்தையை திருத்தும் கதாபாத்திரத்தில் கார்த்தி அசத்தியுள்ளார். அவருக்கேயுரிய அலட்சியமான உடல்மொழியை இந்தப் படத்திலும் வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

வரவேற்பை பெற்ற அதீதி

வரவேற்பை பெற்ற அதீதி

படத்தில் நடித்துள்ள பிரபல இயக்குநர் ஷங்கரின் மகள் அதீதி ஷங்கரின் நடிப்பும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. அவர் வரும் இடங்களில் ரசிகர்களின் ஆரவாரம் அதிகமாக காணப்படுகிறது. இதையடுத்து தென்னிந்திய மொழிப் படங்களில் இவர் ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரீ என்ட்ரி கொடுத்த மனோஜ்

ரீ என்ட்ரி கொடுத்த மனோஜ்

படத்தின் பிரகாஷ்ராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன், மனோஜ், மைனா நந்தினி உள்ளிட்டவர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்தப் படத்தின் மூலம் மனோஜ் தனது ரீ என்ட்ரியை துவங்கியுள்ளார். அவரது மனைவியாக வரும் மைனா நந்தினி வழக்கம் போல சைலண்ட் காமெடியில் கலக்குகிறார்.

சிறப்பான கலெக்ஷன்ஸ்

சிறப்பான கலெக்ஷன்ஸ்

இந்தப் படம் வெளியாகி கடந்த 3 நாட்களில் சிறப்பான வரவேற்பையும் கலெக்ஷன்களையும் பெற்றுவருகிறது. குறிப்பாக இரவுக்காட்சிகளிலும் அரங்கு கொள்ளாத காட்சிகளாக காணப்படுகிறது. சென்னையில் மட்டுமே இந்தப் படம் கடந்த 3 நாட்களில் 80 லட்சம் ரூபாய் வரை வசூலித்துள்ளதாம்.

சர்வதேச பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன்ஸ்

சர்வதேச பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன்ஸ்

கடந்த 3 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டுமே இந்தப் படம் 30 கோடி ரூபாய்களை வசூலித்துள்ளது. முதல் நாளிலேயே 7.21 கோடி ரூபாயும் இரண்டாவது நாளில் 8.2 கோடி ரூபாயும் 3வது நாளான நேற்றைய தினம் 10.61 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கார்த்தியின் படம் ரிலீசாகாத நிலையில், தற்போது விருமன் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

கிராமத்து கெட்டப்

கிராமத்து கெட்டப்

மேலும் இன்றைய தினம் விடுமுறையாக உள்ள நிலையில், மேலும் விருமன் படத்தின் கலெக்ஷன்ஸ் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முதல் வாரத்தில் மட்டுமே படம் 50 கோடி ரூபாய்களை வசூலிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. கார்த்திக்கு எப்போதுமே கிராமத்து கெட்டப் சிறப்பாக கைக்கொடுக்கும். இவர் கிராமத்து கெட்டப்புகளில் நடித்து வெளியான முந்தைய படங்கள் இவருக்கு விமர்சன ரீதியாகவும் வசூல்ரீதியாகவும் சிறப்பாக அமைந்தன.

அடுத்த ஆண்டில் கைதி 2 படம்

அடுத்த ஆண்டில் கைதி 2 படம்

அடுத்ததாக கார்த்தியின் நடிப்பில் பொன்னியின் செல்வன், சர்தார் படங்கள் வெளியாகவுள்ளன. தொடர்ந்து அடுத்த ஆண்டில் கைதி 2 படத்தில் லோகேஷ் கனகராஜுடன் இணையவுள்ளதாக கார்த்தி தனது சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். விஜய் படத்தை முடித்துவிட்டு இந்தப் படத்தில்தான் லோகேஷ் இணையவுள்ளாராம். இதை லோகேஷும் உறுதிப்படுத்தியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X