சூப்பர் காம்பினேஷனில் களமிறங்கும் விருமன் படம்.. ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியானது!

சென்னை : நடிகர் கார்த்தி, அதீதி ஷங்கர், சூரி, பிரகாஷ்ராஜ், ஆர்கே சுரேஷ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது விருமன்.

இந்தப் படம் நாளைய தினம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில், தொடர்ந்து இந்தியா, மலேசியா உள்ளிட்ட பல இடங்களில் பிரமோஷன்களில் படக்குழு ஈடுபட்டது.

படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், பாடல்களும் வெளியாகி சிறப்பான விமர்சனங்களை பெற்றது.

 விருமன் படம்

விருமன் படம்

நடிகர் கார்த்தி, அதீதி ஷங்கர், சூரி, பிரகாஷ்ராஜ், ஆர்கே சுரேஷ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது விருமன். முத்தையா இயக்கத்தில் இந்தப் படத்தின்மூலம் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார் கார்த்தி. முன்னதாக கொம்பன் படத்தில் இந்தக் கூட்டணி முதல் முறையாக இணைந்திருந்தது.

2வது முறையாக கூட்டணி

2வது முறையாக கூட்டணி

கொம்பன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக லஷ்மி மேனன் நடித்திருந்தார். ராஜ்கிரண், கோவை சரளா உள்ளிட்டவர்களும் இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தனர். திருமணம் ஒரு மனிதனை எப்படி பக்குவப்படுத்துகிறது என்பதை மையமாக கொண்டு இந்தப் படம் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது.

கிராமத்து கதைக்களங்கள்

கிராமத்து கதைக்களங்கள்

தொடர்ந்து கிராமத்து கதைக்களங்களிலேயே தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி வரும் முத்தையா இந்தப் படத்திலும் அதையே தொடர்ந்துள்ளார். இந்நிலையில் படத்தில் பிரகாஷ்ராஜ், சரண்யா, சூரி, ராஜ்கிரண் ஆகியோருக்கு மிகவும் வலிமையான கேரக்டர்கள் இந்தப் படத்தில் அமைந்துள்ளது.

அப்பாவை அடித்தவருக்கு தங்க மோதிரம்

அப்பாவை அடித்தவருக்கு தங்க மோதிரம்

இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ் தாசில்தாராக உள்ள நிலையில், அவரது மகனான கார்த்தி சண்டியராக இருக்கிறார். தன்னுடைய அப்பாவை அடித்த ஆர்கே சுரேஷிற்கு பெரிய அளவில் தங்க மோதிரத்தை பரிசளிப்பதோடு அந்த நிகழ்வை குத்தாட்டம் போட்டு கொண்டாடுகிறார்.

ஸ்னீக் பீக் காட்சிகள்

ஸ்னீக் பீக் காட்சிகள்

ஒரே வருத்தம் அதை நேரில் பார்க்க முடியவில்லை என்கிறார். இந்தக் காட்சிகள் தற்போது ஸ்னீக் பீக்காக வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்தக் காட்சிகள் வெளியான சில மணிநேரங்களில் 2.6 லட்சம் வியூஸ்களை யூடியூபில் பெற்றுள்ளது. விருமன் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

Rajkiran | Muthaiah முக்கியமான கருத்து சொல்லியிருக்கார் | Viruman Press Meet | *Kollywood
சண்டியர் கேரக்டர்

சண்டியர் கேரக்டர்

கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு பிறகு கார்த்தி கிராமத்து கெட்டப்பில் நடித்துள்ள படம் விருமன். இந்தப் படம் அவரது முதல் படமான பருத்தி வீரனை அதிகமான இங்களில் நினைவு படுத்துகிறது. அந்தப் படத்தில் வந்தது போலவே, இந்தப் படத்திலும் சண்டியராக நடித்துள்ளார் கார்த்தி. இந்தப் படத்தின் ஆக்ஷன் காட்சிகள் மிரட்டலாக அமைந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X