வெளியானது விருமன் படத்தோட வானம் கிடுகிடுங்க பாடல்.. யுவனின் மேஜிக்!

சென்னை : நடிகர் கார்த்தி, அதிதி ஷங்கர், சூரி, பிரகாஷ் ராஜ் என முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் விருமன்.

படம் கடந்த 3 நாட்களில் தமிழகத்தில் மட்டுமே 30 கோடிகளுக்கும் மேல் வசூலை ஈட்டியுள்ளது.

யுவன் சங்கர் ராஜா இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் மிகவும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி கிராமத்து கெட்டப்பில் நடித்துள்ள படங்கள் அனைத்தும் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. பருத்தி வீரன், கொம்பன் என இந்த பட்டியல் நீளுகிறது. அதில் புதிதாக இணைந்துள்ளது விருமன். கொம்பன் படத்தில் இணைந்த கார்த்தி -முத்தையா கூட்டணி இந்தப் படத்தில் இரண்டாவது முறையாக இணைந்துள்ளது.

அடுத்தடுத்த ஹிட் படங்கள்

அடுத்தடுத்த ஹிட் படங்கள்

கொம்பன் படம் இந்த கூட்டணிக்கு சிறப்பாக கைக்கொடுத்தது போலவே தற்போது விருமன் படமும் சூப்பர் ஹிட்டடித்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்தப் படம் 3 நாட்களில் தமிழகத்தில் மட்டும் 30 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது. சென்னையில் மட்டுமே 80 லட்சம் ரூபாய் வசூலை கடந்த 3 நாட்களில் எட்டியுள்ளது.

 அதிதியை கொண்டாடும் ரசிகர்கள்

அதிதியை கொண்டாடும் ரசிகர்கள்

இந்தப் படத்தின் சிறப்பிற்கு பல காரணங்களை கூறலாம். சுல்தான் படத்திற்கு பிறகு ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு பிறகு இந்தப் படம் வெளியாகியுள்ளது. படத்தில் புதிய மற்றும் பிரஷ் நாயகியாக அதிதி ஷங்கர் இணைந்துள்ளார். இவரது இணைப்பு படத்திற்கு சிறப்பான வரவேற்பை கொடுத்துள்ளது. படத்தில் இவர் வரும் காட்சிகளை விசிலடித்து கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.

சிறப்பான சரண்யா கேரக்டர்

சிறப்பான சரண்யா கேரக்டர்

இந்தப் படத்தில் நடிகை சரண்யா பொன்வண்ணன் கேரக்டர் சிறிது நேரமே வந்தாலும் மிகச்சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளது. தன்னுடைய கணவனின் துரோகத்தை பொருக்க முடியாமல் தன்னை மாய்த்துக் கொள்கிறார் சரண்யா. தன்னுடைய தாயின் மரணத்திற்கு காரணமான தந்தையை கொலை செய்யும் வரை போகிறார் சிறுவனான கார்த்தி.

யுவன் மேஜிக்

யுவன் மேஜிக்

படத்தில் சூரி, பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் சிறப்பாக தங்களது கேரக்டர்களை உணர்ந்து நடித்துள்ளனர். இந்த விஷயங்கள் படத்திற்கு சிறப்பான எதிர்பார்ப்பை கொடுத்துள்ளது. முக்கியமாக யுவனின் இசையில் படத்தில் அனைத்து பாடல்களும் சிறப்பாக அமைந்துள்ளன.

Recommended Video

Open-னா பதில் சொன்ன Adithi Shankar... இப்படி பேசினா பொழச்சிப்பம்மா! *Kollywood
டைட்டில் வீடியோ பாடல் வெளியானது

டைட்டில் வீடியோ பாடல் வெளியானது

இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் டைட்டில் பாடலான வானம் கிடுகிடுங்க என்ற பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. இந்தப் பாடல் லிரிக் வீடியோவாக வெளியாகி அதிகமான வியூஸ்களை பெற்ற நிலையில், தற்போது வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. ஸ்நேகன் எழுதியுள்ள இந்தப் பாடலை யுவன் மற்றும் முத்து சிற்பி இணைந்து பாடியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X