“அண்ணனுக்காக நான் எழுதிய கதை ரெடியா இருக்கு“..சூர்யாவை நெகிழவைத்த கார்த்தி!
சென்னை : அண்ணனுக்காக கதை எழுதிவைத்திருப்பதாக விருமன் செய்தியாளர்கள் சந்திப்பில் கார்த்தி தெரிவித்துள்ளார்.
சூரியாவின் 2D தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படத்தில் நடிகர் கார்த்தி, சூரி, ராஜ்கிரண், அதிதி ஷங்கர், சரண்யா பொன்வண்ணன், வடிக்கரசி ஆகியோர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் பாடல் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது. விருமன் படம் வரும் வெள்ளிக்கிழமை திரையரங்கில் வெளியாக உள்ளது.

விருமன்
சென்னையில் சமீபத்தில் விருமன் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடைபெற்றது. இதில், பேசிய கார்த்தி, கொரோனா லக்டவுன் போது தான் உறவுகளின் முக்கியத்துவத்தை நாம உணர்ந்தோம். கிராமமும், அதன் கலாச்சாரமும் இன்றும் மாறாமல் அப்படியே உள்ளது. கிராமத்தில் உறங்கும் போது தான் எந்த இடையூறும் இல்லாமல் மனம் நிம்மதியா இருக்கறது.

அப்பா - மகன் உறவு
உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்கள் வெளியாவது அவசியம், அதை முத்தையா தன் படங்கள் மூலம் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறார் என கூறினார். இந்த திரைப்படத்தில் அப்பா - மகன் உறவு குறித்து படமாக்கியுள்ளோம். அத்துடன் நடிகர் ராஜ்கிரண் திரைப்படங்களில் நல்ல விஷயங்களை கூற வேண்டும், தவறான விஷயங்களை சொல்லி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்.

அண்ணனுக்கா கதை
தொடர்ந்து பேசிய கார்த்தி, தனது அண்ணன் நடிகர் சூர்யாவின் ஆயுத எழுத்து படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய போதே, அண்ணனுக்காக ஒரு பயோபிக் கதையை எழுதிவைத்து இருக்கிறேன். அதை படமாக்குவது என்னுடைய கனவு எனக் கூறியுள்ளார். மேலும், இந்த படம் பார்க்கும் போது ரொம்ப திருப்தியா இருக்கு நிச்சயம் மக்களுக்கு பிடிக்கும் என நம்புவதான கார்த்தி கூறினார்.

பொன்னியில் செல்வன்
விருமன் படத்தைத் தொடர்ந்து அடுத்த மாதம் பொன்னியில் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் மாதம் 30ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் கார்த்தியின் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தைக்காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

பொன்னியில் செல்வன்
விருமன் படத்தைத் தொடர்ந்து அடுத்த மாதம் பொன்னியில் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் மாதம் 30ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் கார்த்தியின் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தைக்காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதோடு கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ள 'சர்தார்' திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications