சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அசால்டு காட்டும் கார்த்தி… வைரலாகும் புகைப்படம்!
சென்னை : தமிழ் சினிமாவின் நம்பிக்கை நாயகனாக இருந்து வரும் நடிகர் கார்த்தி கொரானா ஊரடங்குக்கு பிறகு இப்பொழுது மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
எப்பொழுதும் கதை தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி வரும் கார்த்தி இப்பொழுது ரெமோ படத்தை இயக்கிய இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சுல்தான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படம் ஒன்றின் பட பூஜையில் கலந்துகொண்ட கார்த்தி அதில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நீண்ட முடியுடன் இருக்கும் தோற்றத்தில் வந்திருந்தது பலரது கவனத்தையும் ஈர்க்க இப்பொழுது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

ரெமோ இயக்குனர்
மாஸ், கிளாஸ், ஸ்டைல் என எந்த பாத்திரமாக இருந்தாலும் அதில் கச்சிதமாக பொருந்தும் நடிகர் கார்த்தி சமீபத்தில் முரட்டுத்தனமான கைதியாக கைதி திரைப்படத்தில் நடித்து அனைவரையும் பிரமிக்க வைத்த நிலையில் இப்பொழுது ரெமோ படத்தை இயக்கிய இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சுல்தான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அதிக பட்ஜெட்டில்
தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகைகளின் பட்டியலில் இணைந்துள்ள ரஷ்மிகா மந்தனா தமிழில் சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக உள்ள நிலையில் இந்த திரைப்படம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க அதிக பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.

பொன்னியின் செல்வன்
இவ்வாறு ரஷ்மிகா மந்தனாவின் வருகைக்காக சுல்தான் திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்க, மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வனில் வல்லவராயன் வந்தியதேவன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் கார்த்தி.

விஜய்யின் மகன்
சூரரைப்போற்று திரைப்படத்தை தொடர்ந்து சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ள புதிய திரைப்படத்தில் அருண் விஜய்யின் மகன் அர்னவ் முதன் முறையாக சினிமாவிற்கு அறிமுகமாகும் நிலையில் அதன் படப்பிடிப்பு பூஜை இப்பொழுது சென்னையில் நடைபெற்றது.

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில்
அதில் அருண் விஜய்யின் குடும்பத்தார் மற்றும் சூர்யாவின் குடும்பத்தார் என பலரும் கலந்து கொள்ள பூஜைக்கு வந்திருந்த கார்த்தி நீண்ட முடியுடன் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இதுவரை கார்த்தியை பார்த்திராத கெட்டப்பில் வந்திருந்த அந்த படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications