பொன்னான 15 ஆண்டுகள்.. பருத்திவீரன் தந்த அமீருக்கு பெரிய நன்றி சொன்ன ’பொன்னியின் செல்வன்’ கார்த்தி!

சென்னை: இயக்குநர் அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகளை கடந்துள்ளது.

பருத்திவீரன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான நடிகர் கார்த்திக்கும் திரைத்துறையில் இது 15வது ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இயக்குநர் அமீர், அண்ணா சூர்யா மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் தனது நன்றியை கார்த்தி தெரிவித்துள்ளார்.

பருத்திவீரன்

பருத்திவீரன்

இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, பிரியாமணி, பொன்வண்ணன், சரவணன், கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2007ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி வெளியான படம் பருத்திவீரன். வித்தியாசமான திரைக்கதை மற்றும் நடிகர்களின் அற்புதமான நடிப்பு இந்த படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக மாற்றியது.

கார்த்தி அறிமுகம்

கார்த்தி அறிமுகம்

நடிகர் சிவகுமாரின் மகனும் சூர்யாவின் தம்பியுமான கார்த்தி இயக்குநராகும் முயற்சியில் உதவி இயக்குநராக மணிரத்னமிடம் பணிபுரிந்து வந்த நிலையில், இயக்குநர் அமீர் அவரை அழைத்து பருத்திவீரன் கதை சொல்ல நடிப்பு பாதைக்கு திரும்பி விட்டார் கார்த்தி. முதல் படத்திலேயே அப்படியொரு நடிப்பை நடித்து அண்ணன் சூர்யாவையே தூக்கி சாப்பிட்ட கார்த்தி என கொண்டாடப்பட்டார்.

முன்னணி நடிகர்

முன்னணி நடிகர்

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்தது போல பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை என வரிசையாக ஹிட் அடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மாறி விட்டார். சகுனி, அலெக்ஸ் பாண்டியன், ஆல் இன் ஆல் அழகுராஜா, பிரியாணி என அடுத்தடுத்து நடித்த படங்கள் சொதப்ப மீண்டும் சுதாரித்துக் கொண்ட கார்த்தி மெட்ராஸ், கொம்பன், தோழா என ஹிட் கொடுத்தார்.

வந்தியத்தேவன்

வந்தியத்தேவன்

காஷ்மோரா படத்தில் வரலாற்று நாயகனாக மிரட்டிய கார்த்தி இயக்குநர் பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் மிரட்ட உள்ளார். கைதி, சுல்தான் என பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனை அள்ளி வரும் கார்த்தி விருமன், சர்தார் என கைவசம் ஏகப்பட்ட படங்களை வைத்துள்ளார்.

பொன்னான 15 ஆண்டுகள்

பொன்னான 15 ஆண்டுகள்

2007ம் ஆண்டு வெளியான பருத்திவீரன் ரிலீசாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பருத்திவீரன் ரசிகர்கள் அந்த படத்தின் ரிலீஸை கொண்டாடி வருகின்றனர். மேலும், நடிகர் கார்த்தி சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி 15 ஆண்டுகள் ஆனதையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அமீருக்கு பெரிய நன்றி

அமீருக்கு பெரிய நன்றி

பருத்திவீரன் 15 ஆண்டுகளை கடந்த நிலையில், நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் அந்த படம் தனது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவத்தை தனக்கு கொடுத்ததாகவும், அந்த படத்தில் இருந்து எந்தவொரு படத்தை தான் செய்தாலும், இயக்குநர் அமீர் உதவி மற்றும் ஊக்கத்தை தொடர்ந்து அளித்து வருகிறார் என அவருக்கு பெரிய நன்றியை கூறியுள்ளார். மேலும், அந்த படத்தை தயாரித்த ஞானவேல் ராஜா, தன்னுடைய அண்ணன் சூர்யா மற்றும் அனைத்து ரசிகர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X