Karthi: சந்தோஷத்தில் ரசிகர்களை நேரில் அழைத்து விருந்து வைத்த கார்த்தி.. எல்லாம் குட் நியூஸ்தான்பா..!

சென்னை: நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆவதற்கு முன்னர் உதவி இயக்குநராக, இயக்குநர் மணிரத்னத்திடம் பணியாற்றினார். அதன் பின்னர் பருத்திவீரன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் நடிகர் கார்த்தி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறிமுகமானார். இதைத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார்.

சிறுத்தை, நான் மகான் அல்ல, பையா, மெட்ராஸ், பொன்னியின் செல்வன் பாகம் 1, பொன்னியின் செல்வன் பாகம் 2, கைதி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். இவரது 25 படமான ஜப்பான் படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது. இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைக் கொடுக்கவில்லை என்றாலும் படம் ஓரளவுக்கு வசூல் குவித்தது. இதுவரை 25 படங்களில் நடித்துள்ள கார்த்தி அதில் 23 இயக்குநர்களுடன் பணியாற்றியுள்ளார். இவரது பொன்னியின் செல்வன் பாகம் 1 மற்றும் பொன்னியின் செல்வன் பாகம் 2 ஆகிய படங்களை மணிரத்னம் இயக்கியிருந்தார். அதேபோல் கொம்பன் மற்றும் விருமன் ஆகிய படங்களை இயக்குநர் முத்தையா இயக்கியிருந்தார்.

Karthi

நடிகர் கார்த்தி சினிமா குடும்பமாக உள்ள சிவகுமார் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தனது நடிப்புத் திறமையாலே தனக்கான வணிகத்தையும் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கியுள்ளார். மேலும் இதுவரை எந்த நடிகையோடும் கிசுகிசுக்கப்படாத நடிகராவே கார்த்தி வலம் வந்து கொண்டு இருக்கின்றார்.

47வது பிறந்த நாள்: இவர் தற்போது நடிகர் அரவிந்த் சாமியுடன் இணைந்து, மெய்யழகன் படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது. இந்த படத்தின் அறிவிப்பு கடந்த மே மாதம் 25ஆம் தேதி கார்த்தியின் 47வது பிறந்த நாளன்று வெளியிடப்பட்டது.

Karthi

ரத்த தானம்: அன்றைய தினத்தில் கார்த்தி ரசிகர்கள் நற்பணி மன்றத்தின் சார்பில் அவரது ரசிகர்கள் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சுமார் 150 பேர் ரத்த தானம் செய்தனர். மேலும் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கும் அவர்களது தாய்மார்களுக்கும் பரிசுப் பெட்டகம் வழங்கினர்.

Karthi

விருந்து: இந்நிலையில் தொடர்ந்து மக்களுக்கு உதவி செய்துவரும் தனது ரசிகர்கள் மன்றத்தினை ஊக்குவிக்கும் விதமாக நடிகர் கார்த்தி அவர்களை நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார். மேலும் அவர்களுக்கு விருந்து வைத்து அவரக்ளுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அதேபோல் இதேபோல் நீங்கள் தொடர்ந்து மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் எனவும், அதற்கு தான் எப்போதும் துணை நிற்பேன் எனவும் பேசி ரசிகர்களை உற்சாகமூட்டியுள்ளார். தற்போது இந்த நிகழ்வு தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

More from Filmibeat

Read more about: karthi கார்த்தி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X