திரும்பவும் பிரியாணி பக்கெட் எடுக்க நேரம் வந்திடுச்சு.. கைதி 2 அப்பேட் கொடுத்த கார்த்தி!
சென்னை: பருத்தி வீரன் படத்தின் மூலம் திரைப்பயணத்தை தொடங்கிய கார்த்தி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர்கள் வெறும் ரசிகர்கள் மட்டுமில்லாமல் பொது மக்களுக்கு பல நல்ல காரியங்களை செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்.அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இன்று விருந்து வைத்த கார்த்தி, கைதி 2 திரைப்படம் குறித்த அப்டேட்டை சொல்லி ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
நடிகர் கார்த்தியின் 47வது பிறந்த நாள் மே மாதம் கொண்டாடப்பட்டது. அந்த நாளில், இவரது ரசிகர்கள் ரத்த தானம் மற்றும் ஏழைய எளிய மக்களுக்கு பல உதவிகளை செய்தனர். அவர்கள் செய்து வரும் உதவியை ஊக்குவிக்கும் வகையில், ரசிகர்களை நேரில் அழைத்து அவர்களை பாராட்டி சான்றிதழ் கொடுத்து, அவர்களுக்கு விருந்து வைத்து அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இதில் பேசிய கார்த்தி, ரசிகர் மன்றங்கள் வெறும் மன்றமாக இருந்துவிடக்கூடாது. இப்போது செய்வது போல, தொடர்ந்து மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். அதற்கு தான் எப்போதும் நான் உங்களுடன் துணையாக இருப்பேன் என்றார்.

கைதி 2: தொடர்ந்து பேசிய அவர், இரண்டு படம் முடிந்துவிட்டது. அந்த இரண்டு படங்களுமே ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகும். அது மட்டுமில்லாம் சர்தார் 2 ஆரம்பிக்க போகிறோம், அடுத்த வருஷம் லோகேஷ் சார் வர சொல்லி இருக்கிறார். திரும்பவும் பக்கெட் பிரியாணி சாப்பிட நேரம் வந்து இருக்கு என்று, ரசிகர்கள் அனைவரும் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் கைதி இரண்டாம் பாகம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கைதி: 2019ம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த திரைப்படம் கைதி. இப்படத்தில் கைதியாக நடித்து அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். பாக்ஸ் ஆபிசில் ரூ100 கோடிக்கு வசூலான இப்படத்தில், கார்த்தி, நரேன், தினா, ஜார்ஜ் மரியான், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட நடித்திருந்தார். தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலுமே டப்பிங் செய்யப்பட்டதால், இதர மொழிகளின் ரீமேக் உரிமைக்குக் கடும் போட்டி நிலவியது. இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், தற்போது கைதி 2 குறித்த அப்டேட்டை கார்த்தி கொடுத்து இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











