ஓஹோ.. வந்தியத்தேவனுக்கு பாடவும் வருமோ.. சர்தார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை பாடிய கார்த்தி!
சென்னை: இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் ஹீரோ வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்து கலக்கிய கார்த்தி தனது அடுத்த படமான சர்தார் படத்துக்கு பாட்டும் பாடி இருக்கிறார்.
விஷாலின் இரும்புத்திரை, சிவகார்த்திகேயனின் ஹீரோ படங்களை இயக்கிய இயக்குநர் பி.எஸ். மித்ரனின் அடுத்த படம் தான் சர்தார்.
தீபாவளிக்கு வெளியாக உள்ள இந்த படத்திற்கான புரமோஷன் பணிகளை தற்போது ஆரம்பித்துள்ளார் கார்த்தி.

வேறலெவல் வந்தியத்தேவன்
நந்தினி, வானதி, குந்தவை, பூங்குழலி என பொன்னியின் செல்வன் படத்தில் உள்ள அனைத்து பெண் கதாபாத்திரங்களுடனும் காம்பினேஷன் சீன் இருந்தது யாருக்கென்றால் அது நம்ம வந்தியத்தேவன் கார்த்திக்குத்தான். ஜாலியான போர் வீரன், எதையும் சாதிக்கக் கூடிய திறமைசாலி என்கிற கதாபாத்திரத்தில் அப்படியே பொருந்தி போய் நடித்து பட்டையை கிளப்பி இருந்தார்.

நிற்க கூட நேரமில்லை
முத்தையாவின் விருமன் பட புரமோஷனில் ஆரம்பித்து, பொன்னியின் செல்வன், சர்தார் என நிற்க கூட நேரமில்லாமல் தொடர்ந்து புரமோஷனுக்காக பல இடங்களுக்கு ஓடி உழைத்து வருகிறார் கார்த்தி. 3 பெரிய படங்களில் நடித்தது மட்டுமில்லாமல், நம்ம படம் நல்லா ரீச் ஆகணும் என ஓடி ஓடி உழைக்கும் இவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

சர்தார் படத்தில் பாட்டு
தீபாவளிக்கு வெளியாக உள்ள கார்த்தியின் சர்தார் படத்தில் இடம்பெற்றுள்ள ஏறு மயிலேறு ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை கார்த்தி பாடி உள்ளதாக சற்றுமுன் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் ட்வீட் போட்ட உடனே சர்தார் ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. நம்ம வந்தியத்தேவன் கார்த்தி பாட்டு பாடியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டு பொன்னியின் செல்வன் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

மீண்டும் லைலா
நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் சர்தார் படத்தின் மூலம் மீண்டும் நடிகை லைலா நடித்துள்ளார். ராஷி கன்னா ஹீரோயினாக உள்ள நிலையில், அவருக்கு அக்காவாக லைலா நடித்துள்ளாரா? இல்லை அப்படி என்ன முக்கியமான கதாபாத்திரம் என்கிற யூகங்கள் கிளம்பி உள்ளன.

பிரின்ஸ் உடன் கிளாஷ்
சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில், கார்த்தியின் சர்தார் படமும் தீபாவளி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதமே இந்த இரு படங்களும் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்த உள்ளது. தீபாவளி பண்டிகை ரேஸில் எந்த படம் ஹிட் அடிக்கப் போகிறது என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.. விரைவில் கார்த்தி பாடிய பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











