twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோவாக்சின்... கோவிஷீல்டு இதில் எது சிறந்த தடுப்பூசி?.... நடிகர் கார்த்தியின் பளீச் கேள்வி !

    |

    சென்னை : கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடிகர் கார்த்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    Recommended Video

    சூர்யாவின் குடும்பம் செய்த மிக பெரிய உதவி | Sivakumar, Suriya, Karthi

    சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைத் தலைவர் டாக்டர் இ. தேரணிராஜனிடம் கலந்துரையாடினார்.

    தமிழக அரசின் கொரோனா நிதிக்கு ரூ. 25 லட்சம் நிதி வழங்கிய அஜித்.. கொண்டாடும் ரசிகர்கள்!தமிழக அரசின் கொரோனா நிதிக்கு ரூ. 25 லட்சம் நிதி வழங்கிய அஜித்.. கொண்டாடும் ரசிகர்கள்!

    நடிகர் கார்த்தியின் பல கேள்விகளுக்கும், தடுப்பூசி குறித்த பல சந்தேகங்களுக்கு அவர் பதிலளித்தார்.

    தடுப்பூசி அச்சம்

    தடுப்பூசி அச்சம்

    கொரோனாவின் இரண்டாவது அலை நாடு முழுவதும் மோசமான சூழ்நிலையை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொடர்பான குழப்பமும், தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மீதான சந்தேகமும் மக்களுக்கு இருந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால் பலர் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் ஒரு வித அச்சத்திலேயே இருந்து வருகின்றனர்.

    பல கேள்வி

    பல கேள்வி

    இந்நிலையில் சென்னை மாநகராட்சி விழிப்புணர்வு குறித்த ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் நடிகர் கார்த்தி, சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைத் தலைவர் டாக்டர் இ. தேரணிராஜனிடம் கொரோனா குறித்து எழும் பல சந்தேகங்களை கேட்டறிந்தார்.

    அதீத தலைவலி

    அதீத தலைவலி

    கேள்வி: கொரோனா 2வது அலை மிக வேகமா பரவி வருது, அறிகுறி ஏதாவது மாறி இருக்கா?

    பதில்: கொரோனா 2வது அலையில், கடுமையான காய்ச்சல் ஏற்படுகிறது, அதி தீவிர தலைவலி மேலும், வயிற்றுப்போக்கு ஏற்படுகின்றன. மேலும் அனைத்து வயதினரையும் இது பாதித்து வருகிறது.

    மருத்துவரின் ஆலோசனை

    மருத்துவரின் ஆலோசனை

    கேள்வி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கட்டாயம் சிடி ஸ்கேன் எடுக்கனும்னு சொல்றாங்க அது கட்டயமா?

    பதில்: நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு மூச்சுவிடுவதில் சிரமம், நிமோனியவால் பாதிக்கப்பட்டுவிட்டார் என்றால் மட்டுமே மருத்துவரின் ஆலோசனைப்படி சிடி ஸ்கேன் எடுக்க வேண்டும். தேவையின்றி எடுப்பதால் தேவையில்லாத பதற்றம்,பயம் ஏற்படுகிறது இதை தவிர்க்க வேண்டும்.

    இரண்டுமே சிறந்தது

    இரண்டுமே சிறந்தது

    கேள்வி : கோவாக்ஸின், கோவிட்ஷீல்டு இதில் எது சிறந்த தடுப்பூசி?

    பதில் : இரண்டு தடுப்பூசியுமே பாதுகாப்பான தடுப்பூசிதான்,தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டால், தீவிரத்தன்மைக்கு போவதில்லை, மரணம் ஏற்படுவது இல்லை. அவர் அவருக்கு என்ன தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமோ அதை போட்டுக்கொள்ளுங்கள்.

    உணவு முறை

    உணவு முறை

    கேள்வி: தடுப்பூசிப் போட்டுக்கொள்வதற்கு முன்பாகவும் போட்டுக்கொண்டதற்கு பின்பும் எந்தமாதிரியான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்?

    பதில் : தடுப்பூசி போட்டுக்கொள்ளும் போது ஆல்கஹால் எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்கின்றனர். தடுப்பூசி எடுத்துக்கொள்வதற்கு ஒரு நாளுக்கு முன்பாகவும் , போட்டுக்கொண்டதற்கு பிறகு இரண்டு நாட்களுக்கு ஆல்கஹால் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது என்று மருத்துவர் தேரணிராஜன் பதிலளித்தார்.

    English summary
    Actor Karthi spoke to Dr E Deranirajan
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X