வாடி என் கரீனா கபூர்.. திடீரென சந்தானத்துடன் எடுத்த அப்படியொரு போட்டோ போட்ட கார்த்தி.. என்ன மேட்டர்?
சென்னை: நடிகர் கார்த்தி மற்றும் சந்தானம் காம்பினேஷன் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது. இந்நிலையில், திடீரென சந்தானத்துடன் எடுத்த போட்டோ ஒன்றை ஷேர் செய்து "வாடி என் கரீனா கபூர்" என கார்த்தி கேப்ஷன் கொடுத்திருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
2011ம் ஆண்டு சிவா இயக்கத்தில் வெளியான சிறுத்தை படத்தில் கார்த்தி மற்றும் சந்தானம் காம்பினேஷனில் வெளியான காமெடி காட்சிகள் வேறலெவலில் ஹிட் அடித்தன.
அதன் பின்னர், சகுனி, அலெக்ஸாண்டர் மற்றும் ஆல் இன் ஆல் அழகுராஜா வரை இவர்களின் காமெடி காம்பினேஷன் ரசிகர்களை சிரிக்க வைத்தன.

சிறுத்தையில் செம காமெடி: இயக்குநர் சிவா இயக்கத்தில் வெளியான படங்களிலேயே சிறுத்தை படம் அளவுக்கு வேற எந்த படத்திலும் காமெடி காட்சிகள் பிரமாதமாக வொர்க்கவுட் ஆகியிருக்காது. அதற்கு ஒரே காரணம் சந்தானம் தான்.
கார்த்தி உடன் இணைந்துக் கொண்டு திருட்டுத் தொழில் செய்யும் நபராக அந்த படத்தில் நடித்திருந்த சந்தானம் மனோபாலாவுடன் சேர்ந்துக் கொண்டு பாம் ஸ்குவாட் அதிகாரியாக எல்லாம் மாறி செய்யும் அலப்பறைக்கு எல்லாம் ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர்.

சொக்கத் தங்கம் ஜுவல்லரி: சகுனி படத்தில் ஆட்டோ டிரைவராக வந்து ரஜினி - கமல் என அட்ராசிட்டி செய்யும் சந்தானம், அலெக்ஸ்பாண்டியன் படத்தில் தனது தங்கைகளை கார்த்தியிடம் இருந்து காப்பாற்ற போராடுவது போல செம சூப்பராக நடித்திருப்பார்.
அதன் பின்னர், வெளியான அழகுராஜா படத்தில் லேடி கெட்டப் போட்டு "சொக்கத் தங்கம் சொக்கத் தங்கம் ஜுவல்லரி.. சொக்க வைக்கும் ஜுவல்லரி" என விளம்பரப்படத்தில் அவர் கரீனா கபூராக நடித்த காட்சிகளை ரசிகர்கள் இன்னமும் மறக்க மாட்டனர்.

திடீரென அந்த போஸ்ட் ஏன்: இந்நிலையில், திடீரென லேடி கெட்டப்பில் இருக்கும் சந்தானத்துடன் கார்த்தி கட்டிப்பிடித்து எடுத்துக் கொண்ட ஸ்டில்லை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட நடிகர் கார்த்தி, "வாடி என் கரீனா கபூர்" என கேப்ஷனும் கொடுத்துள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் நடிகர் கார்த்தி உடன் மீண்டும் சந்தானம் இணைந்து நடிக்கப் போகிறாரா? என்கிற கேள்வியை எழுப்பி உள்ளனர். பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவனாக நடித்த கார்த்தி இந்த தீபாவளிக்கு ஜப்பானாக வரப் போகிறார். அடுத்ததாக நலன் குமாரசாமி படத்திலும் கார்த்தி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











