‘சுல்தான்’ திரையரங்குக்கு சப்ரைஸ் விசிட் அடித்த கார்த்தி…ரசிகர்கள் குஷி!

சென்னை : நடிகர் கார்த்தி, சுல்தான் திரைப்படம் ஓடும் திரையரங்குக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை அன்று வெளியான சுல்தான் திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது.

பாக்கியராஜ் கண்ணன் இப்படத்தை இயக்க, சத்தியன், சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விவேக் மெர்வின், யுவன் ஷங்கர் ராஜா இசையதைத்துள்ளனர்.

முன்னணி நடிகர்கள் பலர்

முன்னணி நடிகர்கள் பலர்

ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணனின் அடுத்த படம் தான் சுல்தான். இதில், கார்த்திக், ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன், லால், அபிராமி, யோகிபாபு, சதிஷ், கே.ஜி.எஃப் ராம்,பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி, சென்ட்ராயன் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்தில் நடித்துள்ளனர்.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

தம்பி, கைதி ஆகிய படங்களில் நடித்த கார்த்திக் இப்படத்தில் மூலம் மீண்டும் ஒரு ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தை பார்த்த அனைவரும் கார்த்தியின் நடிப்பை பாராட்டி வருகின்றனர்.

க்யூட் அறிமுகம்

க்யூட் அறிமுகம்

தமிழில் முதன்முறையாக அறிமுகமாகி உள்ள ரஷ்மிகா மந்தனா வந்த காட்சிகளை ரசிகர்கள் கைத்தட்டியும் விசில் அடித்தும் வரவேற்றனர் தமிழ் சினிமாவுக்கு ஒரு க்யூட் அறிமுகம் ரஷ்மிகா என்று ரசிகர்கள் வர்ணிக்கின்றனர். சுல்தான் படம் குறித்து சமூக வலைதளங்களில் நல்லவிதமாக கருத்துக்கள் வந்து கொண்டு இருக்கின்றன

சர்ப்ரைஸ் விசிட்

இந்நிலையில், ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி தரும் வகையில் நடிகர் கார்த்தி, சுல்தான் திரைப்படம் ஓடும் ஒரு திரையரங்குக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்துள்ளனர். மேலும், திரையரங்க உரிமையாளர்கள் அவரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X