அக்டோபர் 21ம் தேதி ரிலீசாகும் சர்தார்.. படத்திற்காக கார்த்தி பாடிய பாடல்!

சென்னை : நடிகர் கார்த்தியின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி வெற்றிப் பெற்றுள்ளன.

விருமன், பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அவரது சர்தார் படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது.

இந்தப் படத்தின் பிரமோஷன்களில் அடுத்ததாக கார்த்தி படக்குழுவினருடன் இணையவுள்ளார்.

நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தியின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி வருகின்றன. சுல்தான் படத்தை தொடர்ந்து கார்த்தியின் விருமன் படம் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வெளியானது. கொம்பன் படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் இந்தப் படத்தில் கார்த்தி கைக்கோர்த்திருந்தார்.

விருமன் படம்

விருமன் படம்

விருமன் படத்தில் பிரபல இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கார்த்தியுடன் இணைந்திருந்தார். விருமன் படத்தின் மூலம் அவர் திரைத்துறையில் தன்னுடைய அறிமுகத்தை செய்திருந்தார். இந்தப் படத்தில் கிராமத்து கெட்டப்பில் கார்த்தி மற்றும் அதிதி சிறப்பான மற்றும் இயல்பான கேரக்டர்களை வெளிப்படுத்தியிருந்தனர்.

சூர்யா தயாரிப்பு

சூர்யா தயாரிப்பு

நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் கார்த்தி நடித்திருந்த விருமன் படம் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றிருந்தது. இந்தப் படத்தில் சண்டியர் தனமாக இருந்தாலும், குடும்பத்திற்காக மெனக்கெடும் தன்னுடைய அண்ணன்களின் வாழ்க்கை வளமாக பாடுபடும் கேரக்டரில் அதகளம் செய்திருந்தார் கார்த்தி.

பொன்னியின் செல்வன் படம்

பொன்னியின் செல்வன் படம்

இந்தப் படத்தை தொடர்ந்து கடந்த 30ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படமும் கார்த்திக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. படத்தில் வந்தியத்தேவனாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் கார்த்தி. க்ளைமாக்ஸ் காட்சியில் அவரது சண்டைக்காட்சிகளும் சிறப்பாக அமைந்திருந்தன.

ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா?

ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா?

விருமன், பொன்னியின் செல்வன் என அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்துள்ள கார்த்தியின் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ளது சர்தார். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. வரும் அக்டோபர் 21ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படமும் வெற்றியடைந்தால் கார்த்தி ஹாட்ரிக் வெற்றியை பெற முடியும்.

பிரமோஷன்களுக்கு தயாராகும் கார்த்தி

பிரமோஷன்களுக்கு தயாராகும் கார்த்தி

இந்தப் படம் வெளியாக இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், படத்தின் பிரமோஷன்களில் படக்குழுவினரோடு பங்குபெற தற்போதே தயாராகிவிட்டார் கார்த்தி. படத்தில் கார்த்தி ஏறுமயிலேறி என்ற பாடலை பாடியுள்ள நிலையில், விரைவில் இந்தப் பாடல் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

பாடல் பாடிய கார்த்தி

பாடல் பாடிய கார்த்தி

படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள நிலையில், படத்தின் இந்தப் பாடல் ரிலீசுடன் பிரமோஷனை துவங்கவுள்ளது படக்குழு. அடுத்த வாரத்தில் படத்தின் சென்சார் நடத்தப்படவுள்ள நிலையில், அதையடுத்து படத்தின் ட்ரெயிலரும் வெளியாகவுள்ளது. கடந்த 3 மாதங்களில் வெளியாகும் கார்த்தியின் 3வது படம் சர்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X