கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை போட்டுக் கொண்ட நடிகர் கார்த்தி
சென்னை : கொரோனா தடுப்பூசி நாடு முழுவதும் முழுமூச்சாக போடப்பட்டு வருகிறது.
Recommended Video
இதையொட்டி திரைத்துறை பிரபலங்களும் தங்களது தடுப்பூசிகளை போட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் கார்த்தியும் தனது கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை போட்டுள்ளார்.

பெரிய பாதிப்புகள்
நாடுமுழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதிகமான உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. ஆனால் தொடர் லாக்டவுன் உள்ளிட்ட முயற்சிகளின் விளைவாக தற்போது பாதிப்புகள் மற்றும் அதை தொடர்ந்த உயிரிழப்புகள் குறைந்து வருவதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மக்களுக்கு விழிப்புணர்வு
இந்நிலையில் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்தும் பிரபலங்களை பார்த்தும் தங்களது தடுப்பூசிகளை போட்டு வருகின்றனர். பிரபலங்களும் தங்களது தடுப்பூசிகளை போட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்வகையில் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.

ரசிகர்களுக்கு உதாரணம்
இந்த வகையில் இந்திய அளவில் முக்கிய திரைத்துறை பிரபலங்கள் தங்களது கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை போட்டுள்ளனர். சிலர் இரண்டாவது டோசையும் முடித்துள்ளனர். இவர்களை பார்க்கும் இவர்களது ரசிகர்களும் அதை தொடர்ந்து தங்களது தடுப்பூசிகளை போட்டு வருகின்றனர்.

ட்விட்டரில் புகைப்படம்
இந்நிலையில் நடிகர் கார்த்தி தனது கோவிட் -19 தடுப்பூசியின் முதல் டோசை போட்டுள்ளார். மேலும் இதன் புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் இணைத்துள்ளார். கோலிவுட்டில் அதிகமான நடிகர்கள் ஏற்கனவே தங்களது தடுப்பூசியை போட்ட நிலையில் தற்போது கார்த்தியும் தடுப்பூசியின் முதல் டோசை போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











