Japan Trailer: யாரு மீனு.. யாரு திமிங்கலம்.. கார்த்தியின் ஜப்பான் பட டிரைலர் வெளியானது!

சென்னை: கார்த்தி நடித்துள்ள ஜப்பான் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவனாக கனகச்சிதமான நடிப்பை கொடுத்த நடிகர் கார்த்தி ஜப்பான் படத்தின் மூலம் நம்மை மகிழ்விக்க வருகிறார்.

Actor karthi upcoming film Japan Movie Trailer out

நடிகர் கார்த்தியின் 25வது படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.

கார்த்தியின் ஜப்பான்: ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இதில் கதாநாயகியாக அனு இம்மானுவேலும், சுனில், வாகை சந்திரசேகர், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிகுமார், விஜய் மில்டன், மலையாள நடிகர் சணல் அமன் என பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இசைவெளியீட்டு விழா: ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தீபாவளிக்கு வெளியாகும் இந்தப் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. கார்த்தி, ராஜுமுருகன் , ஜப்பான் படத்தின் தயாரிப்பாளர் எஸ். ஆர்.பிரபு என பலர் கலந்து கொண்டனர்.

ஜப்பான் டிரைலர்: இந்த நிகழ்ச்சியில் ஜப்பான் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டது. 2.19 நிமிடம் ஓடக்கூடிய அந்த டிரைலரில் கார்த்தியே முழுவசனத்தையும் பேசுகிறார், டிரைலரின் ஆரம்பத்திலேயே ஓபன் பண்ண கடலை காட்டுகிறோம் அதில் ஒரு குட்டி மீனு, அந்த மீனுக்கு 10 வயசு என்று சிறுத்தை படத்தில் பார்த்த கார்த்தியின் சாயல் இந்த டிரைலரில் தெரிகிறது.

திருடன் போலீஸ் கதையா: திமிங்கலம், சுறா என்ற வசனத்தை எங்கோ கேட்டது போல இருந்தாலும், விஜய் மில்டன், சுனில் போன்றவர்களின் கதாபாத்திரம் கவனத்தை ஈர்க்கிறது. இந்த டிரைலரை பார்க்கும் போது இது வழக்கமாக திருடன் போலீஸ் கதையாக தான் இருக்கும் என்று தெரிகிறது.

தீபாவளிக்கு ரிலீசா: ஜப்பான் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருவதால், வியாழன் அன்றே அதாவது நவம்பர் 9ந் தேதியே வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால், ரிலீஸ் தேதி குறித்த எந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் இதுவரை படக்குழு வெளியிடவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X