விருமன் வெற்றி பெறணும் மீனாட்சியம்மா.. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடிகர் கார்த்தி சாமி தரிசனம்!
மதுரை: விருமன் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா மதுரையில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.
Recommended Video
சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
நேற்று இரவு நிகழ்ச்சி நடைபெற்று முடிந்த நிலையில், இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று நடிகர் கார்த்தி தரிசனம் செய்துள்ள வீடியோ டிரெண்டாகி வருகிறது.

விருமன் டிரைலர்
இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கிராமத்து பின்னணியுடன் உருவாகி உள்ள விருமன் திரைப்படத்தின் டிரைலர் நேற்று மதுரையில் நடைபெற்ற விருமன் பட விழாவில் வெளியிடப்பட்டது. யூடியூபில் இதுவரை 2.8 மில்லியன் வியூஸ்களை கடந்து வெறித்தனமாக டிரெண்டாகி வருகிறது. முன்னதாக வெளியான கார்த்தியின் பொன்னி நதி பார்க்கணும் லிரிக் வீடியோ 10 மில்லியனை கடந்துள்ளது.

ஆயிரம் கோயில்களை கட்டுவதை விட
விருமன் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் சூரி பேசும் போது, ஆயிரம் கோயில்கள், ஆயிரம் அன்னச்சத்திரங்களை கட்டுவதை விட ஒருவருக்கு கல்வி கொடுப்பது பல நூறாண்டுகள் பேசப்படும் அந்த வேலையை சூர்யா சிறப்பாக செய்து வருகிறார் என பாராட்டிப் பேசி பலரது கைதட்டல்களை அள்ளினார்.

மீசை இல்லாத கார்த்தி
அடுத்த படத்தில் மீண்டும் காற்று வெளியிடை கெட்டப்பில் மீசை இல்லாமல் தோன்ற போகிறார் கார்த்தி என்பது தற்போதைய அவரது தோற்றத்தில் இருந்து தெளிவாக தெரிகிறது. செம ஹேண்ட்ஸமாக விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தி அண்ணன் சூர்யா தேசிய விருது பெற்றதற்கு பிறகு நடக்கும் பெரிய விழா இது என்று பேசினார். மேலும், அண்ணன் தம்பி இருவருமே பேசியது எல்லாம் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

மீனாட்சி அம்மன் கோயிலில் கார்த்தி
நேற்று இரவு விருமன் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்து முடிந்த நிலையில், இன்று அதிகாலை மதுரை மீனாட்சி அம்மன் அருளை பெற கோயிலுக்கு சென்று நடிகர் கார்த்தி சாமி தரிசனம் செய்துள்ளார். அவர் கோயிலுக்கு செல்லும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா
ஆகஸ்ட் 15ம் தேதி விருமன் திரைப்படம், செப்டம்பர் 30ம் தேதி பொன்னியின் செல்வன் மற்றும் வரும் தீபாவளிக்கு சர்தார் என அடுத்தடுத்து 3 படங்களை தொடர்ச்சியாக வெளியிட காத்திருக்கும் நடிகர் கார்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என மதுரை மீனாட்சி அம்மனை வழிபட்டுள்ளார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











