Don't Miss!
- Technology புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- News "ரொம்ப தொந்தரவு பண்றீங்க..." வடிவேலுவிடம் டென்ஷனான நபர்.. சட்டென மாறிய முகம்.. அடுத்து என்னாச்சு
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
கார்த்தி பாடிய அந்த பாடல்.. சிரித்தப்படி ரசித்த கமல்.. தீயாய் பரவும் வீடியோ!
Recommended Video
சென்னை: கமலின் உங்கள் நான் நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி பாட்டுப்பாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகர் கமல்ஹாசனின் 60 ஆண்டு திரைப்பயணத்தை கவுரவிக்கும் வகையில் நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர் நடிகைகள் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்கள் பலரும் கமலுடன் பணியாற்றியது குறித்தும் அவருடன் பழகியதும் குறித்தும் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
ஏமாற்றமாட்டார்
நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் சேதுபதி, மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் பெயரை எனக்கு பிடித்துள்ளது கமலஹாசன் அரசியலுக்கு வந்ததே நான் வரவேற்கின்றேன் எல்லோரும் இணைந்து இருப்போம் என்பதையே கட்சியின் லவ்வும் சொல்வதாக உணர்கிறேன் இத்தனை ஆண்டுகளாக அவர் எப்படி ரசிகர்களை ஏமாற்றாமல் இருக்கிறாரோ அது போல அரசியலிலும் ஏமாற்ற மாட்டார் என்று நம்புகிறேன் என்றார்.
நடனமாடிய ரவி
இதேபோல் நடிகர் ஜெயம் ரவி, மேடையில் இளையராஜாவின் இசைக்கு அழகாக நடனமாடினார். அவரது நடனத்தை பார்த்த ரசிகர்கள் கைகளை தட்டி தொடர்ந்து ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து பேசிய ஜெயம் ரவி, கமல் சார் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பே நான் அவருடைய கட்சி இப்போது சொல்லவா வேண்டும் என்றார்.
|
கண்கொட்டாமல் ரசித்தனர்
அவரை தொடர்ந்து நடிகர் கார்த்தி, இளையராஜாவின் இசையில் வெளியான வனிதாவனி வன மோகினி வந்தாடு பாடலை பாடி அசத்தினார். பாடல் தொடங்குவதற்கு முன்பே கண்ணே தொட்டுக்கவா கட்டிக்கவா
கட்டிக்கிட்டு ஒட்டிக்கவா
தொட்டுக்கிட்டா பத்திக்குமே
பத்திக்கிட்டா பத்தட்டுமே
அஞ்சுகமே நெஞ்சு என்னை விட்டு விட்டு துடிக்குது
கட்டழகி ஒன்ன எண்ணி கண்ணு முழி பிதுங்குது
கொத்தி விட வேண்டுமென்று கொக்கு என்ன துடிக்குது
தப்பி விட வேண்டுமென்று கெண்டை மீனு தவிக்குது
குளிக்கிற மீனுக்கு குளிர் என்ன அடிக்குது
பசி தாங்குமா இளமை இனி
பரிமாற வா இள மாங்கனி..
என அவர் தொடங்கியதை நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் கண்கொட்டாமல் பார்த்து ரசித்தனர்.
|
வீடியோ வைரல்
கமலும் எதிரே அமைக்கப்பட்டிருந்த மேடையில் இருந்தப்படி சிரித்து ரசித்தார். கார்த்தி மேடையில் பாட்டுப்பாடிய வீடியோ வைரலாகி வருகிறது.