என்னது.. கார்த்தி அரசியலுக்கு வருகிறாரா?...ரசிகர்கள் ஓட்டிய போஸ்டரால் பரபரப்பு!

மதுரை : நடிகர் கார்த்தியின் ரசிகர்கள் மதுரையில் ஒட்டி உள்ள போஸ்டர், தற்போது சோசியல் மீடியாவில் பேசுபொருளாகி உள்ளது.

நடிகர் சிவகுமாரின் இளைய மகன் கார்த்தி பருத்திவீரன் படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.

அதன் பிறகு பல படங்களில் நடித்த கார்த்தி தற்போது முன்னணி நடிகராக இருக்கிறார்.

நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி

நடிகராகி விட்டால் அரசியலில் நுழைந்து விடலாம் என்ற எழுதப்படாத சட்டம் உள்ளது. அந்த ஆசையில் பல நடிகர்கள் அரசியல் கட்சித் தொடங்கி பின்னர் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டனர். இப்படி நடிகர்களை உசுப்பேத்துவதே ரசிகர்கள் தான். நாளை தமிழகமே, நாளைய முதல்வரே, ஏழரை கோடி மக்களின் தலைவரே என விதவிதமான போஸ்டரை ஒட்டி இல்லாத ஆசைக்கு தூபம்போட்டு விடுகின்றனர்.

தலைமைச்செயலகம் முன்பு கார்த்தி

தலைமைச்செயலகம் முன்பு கார்த்தி

நடிகர் கார்த்தி வரும் 25-ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ள நிலையில், அவரது ரசிகர்கள் வித்தியாசமான போஸ்டரை அடித்து மதுரை முழுவதும் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில் நடிகர் கார்த்தி தலைமைச்செயலகம் முன்பு நிற்பது போலவும், வலது பக்கம் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரும், இடது பக்கம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும் என இரு அரசியல் கட்சித் தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

அரசியலுக்கு வருகிறாரா?

அரசியலுக்கு வருகிறாரா?

நடிகர் கார்த்தி ஏற்கனவே தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பொருளாளராக பதவி வகித்து வரும் நிலையில், திடீரென இப்படி ஒரு போஸ்டருக்கு என்ன காரணம் என்றும்.... கார்த்தி அரசியலுக்கு வருகிறாரா என்றும் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

பல நலத்திட்டங்கள்

பல நலத்திட்டங்கள்

நடிகர் கார்த்தி, மூன்று வேளாண் சட்டத்திற்கு எதிராக தைரியமாக கருத்துச் சொன்னவர். அண்ணன் புதிய கல்விக்கொள்கை, நீட்டுக்கு எதிராக பேச தம்பி வேளாண்கொள்கைக்கு எதிராக பேசினார். இது அவர்கள் தைரியத்தை காட்டியது. அகரம் பவுண்டேஷன் மூலமாக கல்வி உதவி செய்து வருகிறார்கள். விவசாயத்தில் கார்த்திக்குக்கு ஆர்வம் அதிகம். சிவக்குமார் குடும்பத்தில் இருந்து யாரேனும் அரசியலுக்கு வரலாம் என்று பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது ரசிகர்கள் ஒட்டி உள்ள போஸ்டரால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X