கார்த்தி காட்டில் மழை.. ஹீரோ இயக்குநரின் அடுத்த ஹீரோ இவர்தான்?

சென்னை: கைதி, தம்பி என இந்த ஆண்டு இரண்டு பெரிய வெற்றிகளை ருசித்துள்ள நடிகர் கார்த்தி காட்டில் தொடர்ந்து பட மழை தான்.

தம்பி படத்தைத் தொடர்ந்து சுல்தான், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடிகர் கார்த்தி நடித்து வருகிறார்.

இந்நிலையில், சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தை இயக்கிய பி.எஸ். மித்ரன் இயக்கும் அடுத்த படத்தில் கார்த்தி தான் ஹீரோ என்ற டாக் எழுந்துள்ளது.

ஹீரோ இயக்குநர்

ஹீரோ இயக்குநர்

இரும்புத்திரை படத்தின் மூலம் விஷாலுக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த இயக்குநர் பி.எஸ். மித்ரன், இந்த ஆண்டு சிவகார்த்திகேயனுக்கு ஹீரோ எனும் பிளாக்பஸ்டர் படத்தைக் கொடுத்துள்ளார்.

கலவையான விமர்சனங்கள்

கலவையான விமர்சனங்கள்

ஆனால், இரும்புத்திரை படத்திற்கு கிடைத்த அளவுக்கு ஹீரோ படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களும் மிகப்பெரிய அளவுக்கு பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷனுக்கு கிடைக்கவில்லை. படம் நன்றாக இருக்கிறது என்று பிரபலங்கள் பாராட்டி வந்தாலும், விமர்சகர்களிடையே கலவையான விமர்சனத்தை ஹீரோ படம் பெற்றுள்ளது.

ஹீரோ 2 வருமா

ஹீரோ 2 வருமா

ஹீரோ படத்தின் கிளைமேக்ஸில் ஹீரோ 2 படத்திற்கான லீடு இருக்கிறது. ஆனால், ஹீரோ படத்திற்கு கிடைத்துள்ள கலவையான விமர்சனத்தால், ஹீரோ 2 படம் உடனடியாக வருமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. மேலும், டாக்டர் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பிஸி ஆகியுள்ளதால், ஹீரோ 2 படம் இப்போதைக்கு ஆரம்பமாகாது.

அடுத்த ஹீரோ

அடுத்த ஹீரோ

இந்நிலையில், பி.எஸ். மித்ரனின் அடுத்த படத்திற்கான ஹீரோ நடிகர் கார்த்தி தான் என்ற தகவல் கசிந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்தி - பி.எஸ். மித்ரன் இணையும் இந்த படமும் சமூக அக்கறைக் கொண்ட வித்தியாசமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்தி காட்டில் மழை

கார்த்தி காட்டில் மழை

விஜய்சேதுபதி, ஜெயம் ரவியை தொடர்ந்து பல படங்களில் நடிகர் கார்த்தியும் கமிட் ஆகி வருகிறார். சுல்தான், பொன்னியின் செல்வன் படங்களை தொடர்ந்து பி.எஸ். மித்ரன் இயக்கும் புதிய படத்திலும் நடிகர் கார்த்தி நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X