நவரச நாயகன் கார்த்திக்குக்கு திடீர் மூச்சு திணறல்.. ஐசியூவில் அனுமதி.. பரபரப்பு!
சென்னை: நவரச நாயகன் நடிகர் கார்த்திக் திடீர் மூச்சு திணறல் காரணமாக சென்னை அடையாறில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மறைந்த நடிகர் முத்துராமனின் மகன் நடிகர் கார்த்திக். தமிழில் பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் அறிமுகமானார்.
1980 மற்றும் 90 களில் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்தார். தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ள நடிகர் கார்த்திக் தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக தேவ் படம்
தற்போது வரை சினிமாவில் ஆக்டிவாக உள்ள நடிகர் கார்த்திக் குணச்சித்திர மற்றும் வில்லன் கேரக்டர்களில் நடித்து வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் தேவ் படம் வெளியானது.

திடீர் மூச்சு திணறல்
தற்போது தீ இவன், அந்தகன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நடிகர் கார்த்திக், மனித உரிமை காக்கும் கட்சி என்ற அரசியல் கட்சியையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் நடிகர் கார்த்திக் நேற்று திடீர் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில்..
இதனை தொடர்ந்து சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா நெகட்டிவ்
அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது. அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ளும் பணிகளில் ஈடுபட்டிருந்த போது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.


Click it and Unblock the Notifications











