கொரோனா இல்லை.. ஆனால் திடீர் மூச்சு திணறல்.. நவரச நாயகன் நடிகர் கார்த்திக் ஐசியூவில் அனுமதி!
சென்னை: கடுமையான மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் கார்த்திக் ஐசியூவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த நடிகர் முத்துராமனின் மகன் நடிகர் கார்த்திக். தமிழில் பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் அறிமுகமானார்.
1980 மற்றும் 90 களில் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்தார். தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ள நடிகர் கார்த்திக் தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக தேவ் படம்
தற்போது வரை சினிமாவில் ஆக்டிவாக உள்ள நடிகர் கார்த்திக் குணச்சித்திர மற்றும் வில்லன் கேரக்டர்களில் நடித்து வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் தேவ் படம் வெளியானது.

திடீர் மூச்சு திணறல்
தற்போது தீ இவன், அந்தகன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நடிகர் கார்த்திக், மனித உரிமை காக்கும் கட்சி என்ற அரசியல் கட்சியையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் நடிகர் கார்த்திக் கடந்த மாதம் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டார்.

மீண்டும் மூச்சு திணறல்
இதனை தொடர்ந்து சென்னை அடையாறில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குணமடைந்த பிறகு அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார் கார்த்திக். இந்நிலையில் நடிகர் கார்த்திக் கடந்த 5 ஆம் தேதி மீண்டும் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டுள்ளார்.

தீவிர சிகிச்சை
இதனை தொடர்ந்து நடிகர் கார்த்திக் மீண்டும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தீவிரமாக கண்காணிப்பு
நடிகர் கார்த்திக்குக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இருப்பினும் அவருக்கு மூச்சு விடுவதில் தொடர்ந்து சிரமம் உள்ளதால் மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











