புத்தாண்டில் செம வைப் செய்யும் நவரச நாயகன் கார்த்திக்.. எனர்ஜி இன்னும் குறையல.. சும்மா அள்ளுது!

சென்னை: பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகன் கார்த்திக். ரசிகர்களால் நவரச நாயகன் என்று கொண்டாடப்படும் அவருக்கு சமீப காலமாக உடல்நிலை சரியில்லை என்று வதந்திகள் பரவின. ஆனால் அதில் எதுவும் உண்மை இல்லை என்பது அவர் வெளியிட்ட வீடியோ மூலம் உறுதியானது. இந்நிலையில் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு அவர் வைப் செய்யும் வீடியோ சோஷியல் மீடியாவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

அலைகள் ஓய்வதில்லை படத்தில் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் கார்த்திக். முதல் படத்திலேயே தனது தரமான நடிப்பை வெளிப்படுத்தி அடுத்தடுத்து வாய்ப்புகளை பெற்றார். அப்படி அவர் பெற்ற வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினார். பொன்னுமணி, மௌனராகம், அக்னி நட்சத்திரம், வருஷம் பதினாறு, அமரன், கிழக்கு வாசல் என எக்கச்சக்க ஹிட் படங்களில் நடித்தார். அவரது சிறப்பான நடிப்பை பார்த்த ரசிகர்கள் அவருக்கு நவரச நாயகன் என்று பட்டம் கொடுத்தார்கள்.

கொஞ்சம் பிரச்னை: மிகச்சிறந்த நடிகர் என்று பெயர் எடுத்த அவர்; சில குடைச்சல்களையும் கொடுத்தார். அதாவது சொன்ன நேரத்துக்கு ஷூட்டிங் வராதது; அட்வான்ஸை வாங்கிக்கொண்டு ஷூட்டிங்கிற்கே வராமல் இருப்பது போன்றவை அவருக்கு கெட்ட பெயரை சம்பாதித்து கொடுத்தன. ஆனாலும் அதை பற்றியெல்லாம் கவலைப்படாத அவர்; தனக்கு என்ன தோன்றியதோ அதைத்தான் செய்தார். அதனாலேயே அவரது மார்க்கெட் சரிந்துவிட்டதாக அவருடன் பணியாற்றியவர்களும், அவர் காலத்தில் பணியாற்றியவர்களும் சொல்வதுண்டு.

Actor Karthik Appears Healthy in New Year Video Clip Goes Viral on Social Media
Photo Credit:

மீண்டும் வந்த கார்த்திக்: ஒருகட்டத்தில் அவருக்கு மார்க்கெட் சுத்தமாக சரிந்துவிட்டது. இதன் காரணமாக சினிமாவிலிருந்து ஒதுங்கினார். அவர் ஒதுங்கியதை அடுத்து அவரது மகன் கௌதம் கார்த்திக் நடிக்க வந்தார். ஆனால் கார்த்திக் மாதிரி அவரால் ஜொலிக்க முடியவில்லை. ஒருகட்டத்தில் கார்த்திக்கும் மீண்டும் நடித்தார். ராவணன், அனேகன் உள்ளிட்ட சில படங்களில் மட்டும் நடித்திருந்த அவர்; அதற்கு பிறகு சுத்தமாக நடிப்பதை நிறுத்திவிட்டார்.

மீண்டும் ட்ரெண்டிங்: வீட்டில் நிம்மதியாக இருக்கும் அவர்; கடந்த வருடத்தில் மீண்டும் ட்ரெண்டிங் ஆனார். இயக்குநரும் நடிகருமான பாரதி கண்ணன் கொடுத்த ஒரு பேட்டியில், கார்த்திக்கின் லீலைகளை புட்டு புட்டு வைக்க; மற்றவர்களும் அவர் பற்றி பேச ஆரம்பித்தார்கள். அதுமட்டுமின்றி கார்த்திக்கிற்கு சுத்தமாக உடல்நிலை சரியில்லை என்றெல்லாம் வதந்திகள் பரவின. அதனை அவரது மகன் மறுத்தாலும் அந்த தகவல்கள் பரவுவது நிற்கவில்லை. இனிமேலும் விட்டால் சரியாக இருக்காது என கம்பு சுற்றியபடி தனது வீட்டு மாடியிலிருந்து ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

புத்தாண்டு வாழ்த்து: அதை பார்த்து அவரது ரசிகர்கள் நிம்மதியடைந்தார்கள். இந்நிலையில் 2026 புத்தாண்டையொட்டி வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டிருக்கிறார் கார்த்திக். கையில் கம்பு மற்றும் முகத்தில் கூலிங் கிளாஸுடன் காணப்படும் அவர் செமயாக வைப் செய்து, 'எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். 2026 மேஜிக்' என குறிப்பிட்டிருக்கிறார். இந்த வீடியோ இப்போது சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X