நான் அவன் இல்ல.. பட்டியல் சமூகம் தொடர்பாக பரவிய ஆடியோ.. புகார் கொடுத்த கார்த்திக் குமார்!
சென்னை: பட்டியல் சமூக மக்களை நடிகரும், பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவருமான கார்த்திக் குமார் பேசியதாக ஒரு ஆடியோ இணையத்தில் பரவியது. இந்நிலையில் அந்த ஆடியோவில் இருப்பது தன்னுடைய குரல் இல்லை என்று கார்த்திக் குமார் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கார்த்திக் குமார் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகையாகவும், பாடகியான சுசித்ரா, தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் ஓரினச்சேர்க்கையாளர் என்றும், அவரும் தனுஷும் இணைந்து குடித்துவிட்டு ஒரு அறைக்குள் செல்வதை தான் கண்டதாகவும், அந்த அறைக்குள் அவர்கள் என்ன செய்தார்கள் என்பதும் எனக்கு தெரியும் என்று அவர் பரபரப்பு தகவல் ஒன்றை அண்மையில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.

பாடகி சுசித்ரா: அதேபோல எனக்கு திருமணமான இரண்டு ஆண்டுகளில், கார்த்திக்குமார் ஓரினச்சேர்க்கையாளர் என்பது எனக்கு தெரிந்து விட்டது என்றும், ஆனால் இது எங்கள் தாய் தந்தையர்கள் சேர்ந்து நடத்தி வைத்த திருமணம் என்பதால் தான் பொறுமையாக இருந்ததாகவும். அதன்பிறகு 12 ஆண்டுகள் கழித்து விவாகரத்து பெற்றதாகவும் கூறியிருந்தார். இதற்கு வீடியோ மூலம் பதிலடி கொடுத்த, கார்த்திக்குமார், "நான் ஓரினச் சேர்க்கையாளராக இருந்தேன் என்றால், நிச்சயம் அதை பொதுவெளியில் பகிரங்கமாக சொல்வதற்கு எனக்கு எந்த கூச்சமும் இல்லை என்று பேசி இருந்தார்.
வளர்ப்பு சரியில்ல: இதையடுத்து, கார்த்திக் சுசித்ராவிடம் பேசும் ஆடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில், நீ அசிங்கமாக பேசுற இதெல்லாம் படிச்சவங்க பேசுற பேச்சா இல்ல. படிக்காத பட்டியலின பெண்கள் பேசுகிற மாதிரி நீ பேசுற, நீ ஏன் இந்த மாதிரி பேசுற என்று தான் நான் கேட்டேன், உன் வளர்ப்பு அப்படி இல்லயே, உன்னை நல்லாத்தானே வளர்ந்து இருக்காங்க, நல்ல ஆச்சாரமான பிராமின் ஃபேமிலில இருந்துதான வந்த என்று கார்த்திக் பேசுகிறார். சுசி லீக்ஸ் விவகாரம் போலவே, கார்த்திக்கு குமாரின் ஆடியோவும் வெளி யாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோசமான பேச்சு: இந்த ஆடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலான நிலையில் அவரின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. மேலும், அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவர் இளமுருகு முத்துத் தேசியபட்டியலின ஆணையத்தில் புகார் அளித்ததை அடுத்து 15 நாட்களுக்குள், விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சைபர் கிரைம் ஏடிஜிபிக்கு, தேசிய பட்டியலின ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அது என் குரல் இல்லை: மேலும் பட்டியலின பெண்கள் குறித்துத் அவதூறாக பேசியதாக பரவும் ஆடியோ என்னுடையதில்லை என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை அவர் வெளிட்டிருந்தார். அதில், நான் இப்படி பேசவில்லை . அது என்னுடைய குரலும் இல்லை. இது போன்ற வார்த்தைகளை பேசுபவன் நான் இல்ல என்று தெரிவித்திருந்தார்.
விரைவில் உண்மை தெரியும்: இந்நிலையில், கார்த்திக் குமார் தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அந்த ஆடியோவில் மரியாதை இல்லாமல், தரக்குறைவாக பேசுனது யார்? இது குறித்து நானும் என் வழக்கை பதிவு செய்து விட்டேன். நான் அப்படி பேசக்கூடியவன் இல்லை. அந்த குரலை கேட்டு சிலர் இது இவருடைய குரல் இல்லை என்று நம்பினார்கள், சிலர் இவர் இப்படி பேச மாட்டார் என்று நம்பினார்கள் அவர்களுக்கு ரொம்ப நன்றி. ஆனால், சிலர் இவன் இல்ல, இவனா இருந்தா நல்லா இருக்கும் என்று என் மீது வன்மத்தை கக்கியவர்களுக்கு நன்றி.விரைவில் உண்மை தெரியவரும் என்று பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











