தெலுங்கு வெர்ஷனில் வெளியாகும் கார்த்தியின் சூப்பர் ஹிட் திரைப்படம்!
சென்னை : நடிகர் கார்த்தியின் திரைப்படங்களுக்கு தமிழில் எந்த அளவிற்கு வரவேற்பு உள்ளதோ அதே அளவிற்கு தெலுங்கிலும் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.
இதனால் தமிழில் இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் தெலுங்கு மொழியில் டப் செய்யப்பட்டு வெளியாகி கொண்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 2014ம் ஆண்டு பா. ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் திரைப்படம் தெலுங்கு வெர்ஷனில் வெளியாகிறது என படக்குழு அறிவித்துள்ளது.

ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல்
தமிழ் சினிமாவை பொறுத்த வரையிலும் நடிகர் கார்த்தி தேர்ந்தெடுக்கும் கதைகள் என்றாலே அது மிகச் சிறப்பாக இருக்கும். பருத்திவீரன் தொடங்கி இன்றுவரை அதே பார்முலாவை பின்பற்றி வருகிறார். ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் வித்தியாசமாக இருக்கும் அவ்வாறு தன்னுடைய ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசம் காட்டி நடித்து வரும் கார்த்திக்கு தமிழில் எந்த அளவிற்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளதோ அதே அளவுக்கு தெலுங்கிலும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

வடசென்னை மக்களின் வாழ்வியலை
அதனாலேயே தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களும் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி அங்கும் பெரும் வசூலை செய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான திரைப்படம் மெட்ராஸ். தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படம் வடசென்னை மக்களின் வாழ்வியலை அப்படியே காட்டி இருந்தது.

படித்தவர்களும் விளையாட்டிலும் சிறந்தவர்களும்
அதுவரை படங்களில் வடசன்னை மக்கள் என்றாலே ரவுடிகளும் தாதாக்களும் வசிக்குமிடம் என காட்டிக் கொண்டிருந்த சூழலில் வடசென்னையில் படித்தவர்களும் விளையாட்டிலும் மிகச் சிறந்தவர்களும் இருக்கின்றார்கள் என்பதை நிஜ வாழ்க்கையோடு ஒன்றி காட்டிய திரைப்படம் மெட்ராஸ்.

சுவர் அரசியல்
ஒரே ஒரு சுவரை வைத்துக் கொண்டு அதில் நடக்கும் அரசியலை அப்பட்டமாக கூறியிருந்த இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பு பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. கார்த்தி, கேத்ரின் தெரசா, கலையரசன், ரித்விகா மற்றும் இதில் நடித்த அனைத்து நடிகர் நடிகைகளின் நடிப்பும் அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் இயக்குனர் பா ரஞ்சித்- க்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்தது.

தெலுங்கு வெர்ஷனில் ரிலீஸ்
இந்த நிலையில் தமிழில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற மெட்ராஸ் இப்போது தெலுங்கில் "நா பேரு சிவா 2 " என்ற பெயரில் டப் செய்யப்பட்டு இந்த மாதம் வெளியாகிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு இப்போது வெளியிட்டுள்ளது. கொரோனாவால் திரையரங்குகள் மூடப்பட்டதால் பெரும்பாலான புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கார்த்தியின் மெட்ராஸ் திரைப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ஜனவரி 13ஆம் தேதி வெளியாவதால் தெலுங்கு ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











