அதிதி ஷங்கரிடம் மொக்கை வாங்கிய கார்த்தி.. சரியான வாலு பொண்ணா இருப்பாங்களோ?

சென்னை: நடிகர் கார்த்தி, அதிதி ஷங்கர், சூரி, ராஜ்கிரண் போன்ற பலரும் நடித்திருக்கும் திரைப்படம் விருமன்.

வரும் 12 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக இருக்கும் இந்த திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் விருமன் சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரசியங்களையும், புதுமுக நாயகியான அதிதி ஷங்கர் செய்த அலப்பறைகளையும் மேடையில் கூறியுள்ளார் நடிகர் கார்த்தி.

ஆவல் அதிகரித்துள்ளது

ஆவல் அதிகரித்துள்ளது

2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி இருக்கும் விருமன் படம் ரசிகர்களிடையே பெரும் ஆவலை தூண்டியிருக்கிறது. ஏற்கனவே பல படங்களில் கிராமத்து நாயகனாக நடித்திருக்கும் நடிகர் கார்த்திக்கு இந்த படம் உண்மையிலேயே ஒரு சவால் நிறைந்த படமாக தான் உள்ளது.

இப்படத்தின் நாயகியாக நடித்திருக்கிறார் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் அதிதி ஷங்கருக்கு இது அறிமுகப்படம் என்பதால் ரசிகர்கள் இவரை திரையில் காண பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வாலு பொண்ணு அதிதி ஷங்கர்

வாலு பொண்ணு அதிதி ஷங்கர்

இப்படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில், இந்தப் படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். தனது முதல் படத்திலேயே கிராமத்து நாயகியாக கலக்கியுள்ள அதிதி ஷங்கர். நிஜத்திலேயே இவர் கலகலப்பாக ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று இருக்கக்கூடிய வாலு பொன்னாக தான் இருப்பார் என்பது இவரைப் பார்க்கும் பொழுதே தெரிகின்றது.

மீண்டும் இணைந்த கூட்டணி

மீண்டும் இணைந்த கூட்டணி

இந்த படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் முத்தையா. இவர் ஏற்கனவே கார்த்தி நடித்த கொம்பன் திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விமர்சனம் ரீதியாக அந்த படம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. விருமன் திரைப்படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி, கருணாஸ், வடிவுக்கரசி, சரண்யா பொன்வண்ணன் போன்ற பலரும் நடித்துள்ளனர். சமீபத்தில் சென்னையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த படத்தில் நடித்த பலரும் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலகலப்பாக தங்களது அனுபவங்களை பகிர்ந்ததுடன், ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த ரணகளத்தையும் பகிர்ந்துள்ளனர்.

Recommended Video

Madurai-னாலே Special தான் ! Karthi speech | Viruman Audio launch |*Kollywood
மொக்கை வாங்கிய கார்த்தி

மொக்கை வாங்கிய கார்த்தி

நடிகர் கார்த்தி மேடையில் கூறிய பல விஷயங்கள் தற்போது சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகின்றது. படப்பிடிப்புகளில் எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும் அதிதி ஷங்கர், படத்தின் பூஜையின் போது தனது வாலு தனத்தை கார்த்தியிடம் காட்டியுள்ளார். இப்படத்தின் பூஜை நடந்து கொண்டிருக்கும் பொழுது, உலகத்திலேயே பணக்கார நாடு எது என்று கார்த்தி இடம் கேட்டுள்ளார் அதிதி ஷங்கர். கடி ஜோக் என்று தெரியாமல் கார்த்தி, கூகுல், விக்கிபீடியா என்று அனைத்தையும் தேடி உள்ளார். பிறகு பதில் தெரியவில்லை என்று சொன்னவுடன் பங்களாதேஷ் என்று கூறியுள்ளார் அதிதி. எப்படி என்று கார்த்தி கேட்க அதில் தான் பங்களா இருக்கு என்று கூறியுள்ளார். இது போல் அடிக்கடி கடி ஜோக்குகளை கேட்டு, படபிடிப்புகளிலும் ஜாலியாகவே இருந்தார் அதிதி என்று தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் கார்த்தி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X