கோ பட நாயகி .. கார்த்திகா நாயருக்கு இன்று பிறந்தநாள்.. வாழ்த்தும் பிரபலங்கள்!

சென்னை: அழகான கண்ணசைவாலும் ஆளைக் கொல்லும் அழகாலும் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்து வந்தவர் நடிகை ராதாவின் மகளும் கோ பட கதாநாயகியுமான கார்த்திகா நாயர்.

Recommended Video

Navya Nair son debut Film • Oruthee | Sai Krishna, V.K.Prakash

இவர் தன்னுடைய பிறந்தநாளை இன்று மகிழ்ச்சியோடு தனது குடும்பத்துடன் கொண்டாடி வருகிறார்.

ஜூன் 27ஆம் தேதியான இன்று இவர் தனது 28 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி ரசிகர்கள், நண்பர்கள், திரைப்பிரபலங்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துக்களை கார்த்திகா நாயருக்கு சொல்லி வருகின்றனர்.

மிகப்பெரிய வெற்றி

மிகப்பெரிய வெற்றி

தமிழில் கோ என்ற படத்தின் மூலம் ஜீவாவுடன் இணைந்து நடித்து முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை கொடுத்தவர் நடிகை கார்த்திகா நாயர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பிளாக்பஸ்டர்

பிளாக்பஸ்டர்

1990களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ராதா. இவரின் மூத்த மகளான கார்த்திகா நாயர் முதன் முதலில் தெலுங்கில் ஜோஸ் என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டார். தமிழில் கேவி ஆனந்த் இயக்கத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து வசூலை வாரி குவித்த கோ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார்.

ரசிகர் கூட்டம்

ரசிகர் கூட்டம்

தமிழ் மற்றும் தெலுங்கு இருமொழிகளிலும் இவர் அறிமுகமான முதல் படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்து இரண்டிலும் சிறந்த புதுமுக கதாநாயகிக்கான விருதை பெற்றார். இவ்வாறு அதிரடியாக இறங்கிய கார்த்திகா நாயர் பார்க்கவே மிகவும் அழகாகவும் வசீகரிக்கும் கண்களுடனும் இருக்கும் இவருக்கு நடித்த ஓரிரு படங்களிலேயே மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உருவானது.

ராதாவை திரையில்

ராதாவை திரையில்

மேலும் இவர் நடிகை ராதாவின் மகள் என்பதால் ரசிகர்களிடம் கூடுதல் கவனமும் எதிர்பார்ப்பும் இருந்து வந்தது. ராதாவின் முக சாயல் அப்படியே கார்த்திகாவுக்கு இருப்பதால் ரசிகர்கள் மீண்டும் ராதாவை திரையில் பார்த்தது போல கார்த்திகாவை கொண்டாடி வருகின்றனர்.

முதல் திரைப்படம்

முதல் திரைப்படம்

மேலும் இவர் அருண் விஜய் உடன் இணைந்து நடித்த சண்டைக்காட்சிகள் நிறைந்த வா டீல் திரைப்படம் இந்த ஆண்டு OTT ல் வெளியாக இருக்கிறது. இதுவரை கார்த்திகா நடித்த அனைத்து படங்களும் தியேட்டரில் மட்டுமே ரிலீஸ் ஆகி வந்த நிலையில் இவர் நடித்து OTT ல் வெளியாக இருக்கும் முதல் திரைப்படம் வா டீல் என்பதால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

ஆசீர்வாதங்களுடன்

ஆசீர்வாதங்களுடன்

இவ்வாறு பல ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து ரசிகர்களை தன் நடிப்பால் ஈர்த்து வந்த நடிகை கார்த்திகா நாயர் இன்று தனது பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் குடும்பத்தாரின் வாழ்த்துக்களுடனும், ஆசீர்வாதங்களுடனும் கொண்டாடி வருகிறார். ஜூன் 27 ஆம் தேதியான இன்று கார்த்திகா தனது 28 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி இவருக்கு பல்வேறு தரப்பினரும், நண்பர்களும், திரை பிரபலங்களும் என தங்களது வாழ்த்துக்களை சொல்லி மகிழ்வித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X