டிஜிட்டல் அரெஸ்டான நடிகர் கார்த்திக்.. சரியான நேரத்தில் வெளியான வீடியோ.. நடந்தது என்ன?
சென்னை: இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் எந்த அளவிற்கு வளர்ந்து இருக்கிறதோ, அதற்கு இணையாக மோசடிப் செய்பவர்களும் பல விதங்களில் மோசடிகளை செய்து வருகின்றனர். அப்படி ஒரு மோசடி தான் டிஜிட்டல் அரஸ்ட். இதனால் பலர் பல லட்சங்களை இழந்திருக்கின்றனர். அது குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை நடிகர் கார்த்திக் வெளியாக இருக்கிறது.
பணத்தை எடுப்பதற்கும், போடுவதற்கும் வங்கி வாசலில், வரிசையில் காத்திருந்த காலம் எல்லாம் மலையேறி விட்டது. கையிலிருக்கும் தொலைபேசியை ஒரு தட்டு தட்டினால் யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ, யாரிடம் இருந்து பணம் வர வேண்டுமோ, ஒரு நிமிடத்தில் நமது வங்கி கணக்கில் வந்து விடுகிறது. இப்படி ஒரு வகையில் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே சென்றாலும், அதை வைத்து மோசடி செய்யும் விஷமக்காரர்களும், புதிது புதிதாக பல மோசடிகளை அரங்கேற்றி வருகின்றனர். அதுதான் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி இதுகுறித்து பிரதமரே பேசும் அளவிற்கு நிலைமை மோசமாகி விட்டது.

மக்கள் உஷார்: அப்பாவி மக்களை தொடர்பு கொள்ளும் மோசடியாளர்கள், தங்களை அரசு துறையின் அதிகாரி என்றும் நீங்கள் அனுப்பிய பார்சலில் போதை பொருள் இருந்தது என்றும், இல்லை ஏதோனும் சட்டத்துக்கு புறம்பான செயலில் ஈடுபட்டதாக சொல்லி மிரட்டுவார்கள். பின் வீடியோ அழைப்பில் இணையுமாறு சொல்லி பயப்பட வைத்து, பின் உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் கைது செய்துவிட்டதாக சொல்லுவார்கள். அவர்கள் மோசடியாளர்கள் என்பதை கொஞ்சம் கூட அடையாளம் காண முடியாத வகையில் அவர்களது பேச்சும், செயல்பாடு இருக்கும். மேலும், இந்தக் குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க நான் உறுதுணையாக இருக்கிறேன் என்று சொல்லி, வங்கிக் கணக்கு அல்லது யுபிஐ மூலம் பணம் அனுப்புமாறு சொல்வார்கள். பணத்தை பெற்றதும் அவர்களை எந்த வகையிலும் தொடர்பு கொள்ள முடியாது.அதன் பிறகே தாங்கள் மோசடியாளரிடம் பணத்தை இழந்தது தெரியவரும்.
120 மோசடி: இந்த மோசடியில் மட்டும் இதுவரை ரூ120 கோடி மோசடி நடந்துள்ளது, கஷ்டப்பட்டு சம்பாதித்து சேர்ந்து வைத்த பணத்தை ஒரே நொடியில் ஆட்டையை போடுகிறார். இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அனைத்து அழைப்புகளிலும், தெரியாத நபர்களிடம் இருந்து அழைப்பு வந்தால், அரசு அதிகாரி என்று கூறினால், மக்கள் ஊஷாராக இருக்க வேண்டும் என்று கூறி வருகிறது. அந்த வகையில் நடிகர் கார்த்திக், விழிப்புணர்வு வீடியோவில் நடித்துள்ளார். அரசு அதிகாரிகள் என சொல்லிக்கொண்டு யாராவது மிரட்டி பணம் கேட்டால், அவர்கள் குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளிக்குமாறு கூறியுள்ளார்.
இந்த மோசடியில் கடந்த ஆண்டில் பலர் கோடிக்கணக்கான பணத்தை இழந்த பிறகு இவ்வளவு தாமதமாக விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த நேரத்தில், அந்த மோசடி கும்பல் வேறமாதிரி யோசித்து திருட தயாராகி இருப்பார்கள். இந்த காலகட்டத்தில் மக்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டும், தெரியாத நபர்களிடம் இருந்து அழைப்பு வந்தால், அதை தவிர்த்துவிடுவது தான் சிறந்தது. மேலும், டிஜிட்டல் அரெஸ்ட் என்று ஒன்று இல்லவே இல்லை என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications











