Actor Karthi: எம்ஜிஆர் ரசிகராக நடிகர் கார்த்தி.. வெளியானது கார்த்தி 26 பட ஃபர்ஸ்ட் லுக்!

சென்னை: நடிகர் கார்த்தி அடுத்தடுத்து சிறப்பான படங்களில் சிறப்பான இயக்குனர்களுடன் கைகோர்த்து வருகிறார். அந்த வகையில் தற்போது கார்த்தி 26 மற்றும் கார்த்தி 27 படங்களில் நலன் குமாரசாமி மற்றும் பிரேம்குமார் இயக்கத்தில் இணைந்துள்ளார். இன்றைய தினம் கார்த்தி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிவரும் சூழலில், அவரது பிறந்த நாள் கொண்டாட்டமாக இந்த படங்களின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகியுள்ளன.

இந்தப் படங்களுக்கு மெய்யழகன் மற்றும் வா வாத்தியார் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை அடுத்தடுத்து தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் கார்த்தி வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். இந்த படங்களின் ஷூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ள சூழலில் படத்தின் ரிலீஸ் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Actor Karthi s Karthi 26 movie first look poster released to celebrate his birthday today

நடிகர் கார்த்தி: நடிகர் கார்த்தி இன்றைய தினம் தன்னுடைய நாற்பத்தி ஏழாவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவரது அடுத்தடுத்த படங்களின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகியுள்ளன. நேற்றைய தினம் கார்த்தி 27 படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியிடப்பட்டது. 96 பட புகழ் பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு மெய்யழகன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய தினமும் கார்த்தியின் பிறந்தநாள் கொண்டாட்டமாக கார்த்தி 26 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

கார்த்தி 26 படம்: நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் கிருத்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்திற்கு வா வாத்தியார் என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் கார்த்தியின் தாத்தாவாக நடித்துள்ள ராஜ்கிரண், தன்னுடைய பேரனை எம்ஜிஆரை போலவே வளர்ப்பதாகவும் அதையொட்டி எம்ஜிஆர் போலவே அடுத்தடுத்த கெட்டப்புகளில் கார்த்தி தோன்றுவதாகவும் இந்த படத்தின் கதைக்களம் குறித்து கூறப்பட்டுள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்களை வெகுவாக கவரும் வகையில் அமைந்துள்ளது.

எம்ஜிஆர் ரசிகராக கார்த்தி?: பர்ஸ்ட் லுக் போஸ்டரில் எம்ஜிஆரின் பல்வேறு கெட்டப்புகளை ஒட்டிய இமேஜ்கள் இருக்க அதன் நடுவில் நடிகர் கார்த்தி போலீஸ் அதிகாரி கெட்டப்பில் காணப்படுவதாக உள்ளது. முன்னதாக சூது கவ்வும், காதலும் கடந்து போகும் படங்களை இயக்கிய நலன் குமாரசாமி, இந்த படத்தில் கார்த்தியை வித்தியாசமாக காட்ட முயற்சித்துள்ளார். நான் ஏற்கும் கேரக்டர்களுக்கு மிகச் சிறப்பான வகையில் ஈடு கொடுக்கும் நடிகர் கார்த்தி இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ள சூழலில் விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.


விரைவில் ரிலீஸ் அப்டேட்: படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்த படம் கார்த்தியின் கேரியரில் சிறப்பான படமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள சூழலில், பாடல்களும் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். படம் விரைவில் ரிலீசாகவுள்ளதாக தற்போது வெளியாகியுள்ள பர்ஸ்ட் லுக் போஸ்டரில் தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X