Paiyaa Re-release: ஏப்ரலில் ரீ-ரிலீசாகும் பையா படம்.. அழகான தருணங்களுக்கு தயாராகும் ரசிகர்கள்!

சென்னை: இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2010ம் ஆண்டில் வெளியானது பையா. பருத்திவீரன் என்ற கிராமத்து சப்ஜெக்ட்டில் நடித்திருந்த கார்த்தியை மிகப்பெரிய அளவில் ஸ்டைலிஷ்ஷாகவும் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாகவும் இந்தப் படம் வெளிப்படுத்தியது. மேலும் ரொமாண்டிக் ஹீரோவாகவும் தமன்னாவுடனான காதலை வெளிப்படுத்த முடியாமல் தன்னுடைய ஏக்கத்தை சிறப்பாக இந்தப் படத்தின் பல தருணங்களில் வெளிப்படுத்தியிருப்பார் கார்த்தி. இதுபோன்ற ஒரு லவ்வர் தனக்கு கிடைக்க மாட்டாரா என்று இளம்பெண்களையும் ஏங்க செய்தது.

கார்த்தியின் சிறப்பான நடிப்பு, லிங்குசாமியின் இயக்கம், தமன்னாவின் பிரெஷ்னஸ், காமெடி, அதிரடி ஆக்ஷன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் டிராவலிங் த்ரில்லர் கதையாக வெளியாகி ரசிகர்களை கட்டிப்போட்ட பையா படம் வசூலிலும் சாதனை படைத்தது. தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கும் முயற்சியில் லிங்குசாமி ஈடுபட்டுள்ளார். இதன் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே 14 ஆண்டுகள் கழித்து இந்தப் படம் தற்போது மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Actor Karthi s evergreen blockbuster movie Paiyaa re-release in Theatres on April 11th

கார்த்தியின் பையா படம்: நடிகர் கார்த்தி, தமன்னா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2010ம் ஆண்டில் வெளியானது பையா படம். பருத்தி வீரன் என்ற கிராமத்து சப்ஜெக்டில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார் கார்த்தி. அந்த நேரத்தில் அவரை முழு ஆக்ஷன் ஹீரோவாக, ரொமாண்டிக் நாயகனாக, காமெடியில் அதகளம் செய்பவராக பல்வேறு பரிணாமங்களில் வெளிப்படுத்தியது பையா. லிங்குசாமி இயக்கத்தில் வெளியான இந்தப் படம் முழுமையான ஆக்ஷன் என்டர்டெயினராக வெளியாகி வசூலிலும் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்தது. படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

யுவன் சங்கர் ராஜாவின் இசைஜாலம்: யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் இந்தப படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை தாளம் போட வைத்தன. குறிப்பாக துளி துளி துளி மழையாய் வந்தாளே என்ற பாடல் இளைஞர்களால் கொண்டாடப்பட்டது. தற்போதும் ரசிகர்களின் எவர்கிரீன் பேவரைட் பாடலாக உள்ளது. கார்த்தியின் சினிமா கேரியரில் முக்கியமான படமாக அமைந்த இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை தற்போது லிங்குசாமி இயக்க கமிட்டாகியுள்ளார். படத்தில் கார்த்தி நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், அதையடுத்து அதர்வா நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் படத்தில் மறைந்த நடிகர் முரளியின் இரண்டாவது மகன் ஆகாஷ் முரளி இந்தப் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ரீ-ரிலீசாகும் பையா படம்: இதனிடையே கடந்த 2010ம் ஆண்டில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்த பையா படம் தற்போது மீண்டும் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் ஆகவுள்ளது. அதிரடி ஆக்ஷன் படமாக ரோட் டிராவல் படமான இந்தப் படம் வரும் ஏப்ரல் 11ம் தேதி மீண்டும் ரிலீசாகவுள்ளதாக படக்குழு தற்போது அறிவித்துள்ளது. திருப்பூர், கோவை, சென்னை போன்ற பகுதிகளில் இந்தப் படம் ரிலீசாகவுள்ளதாக வீடியோ மூலம் படத்தின் இயக்குநர் லிங்குசாமி தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் யுவனின் இசை மிகப்பெரிய பலம் என்று பாராட்டு தெரிவித்துள்ள அவர், இந்தப் படத்தை மீண்டும் திரையரங்குகளில் என்ஜாய் செய்யுமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.

கார்த்தியின் எவர்கிரீன் படம்: கார்த்தி தற்போது மிகப்பெரிய அளவில் ஆக்ஷன் ஹீரோவாக உருமாறியுள்ளார். ஆக்ஷனில் மட்டுமில்லாமல் பல்வேறு ஜானர்களிலும் அவர் அடுத்தடுத்து நடித்து வருகிறார். இந்த அவரது வெற்றிக்கு மிகச்சிறப்பாக உதவி செய்த அவரது துவக்க கால படங்களில் பையா படத்திற்கு மிகப்பெரிய இடம் உண்டு. இந்தப் படம் இப்போதும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டாலும் ஓடிடியிலும் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் இந்தப் படத்தை மீண்டும் திரையரங்குகளில் பார்க்கும் அனுபவத்தை ரசிகர்கள் மிஸ் செய்ய மாட்டார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X