Japan movie: சென்சார் முடிந்த கார்த்தியின் ஜப்பான் படம்.. 2வது சிங்கிளும் ரிலீஸ்!
சென்னை: நடிகர் கார்த்தியின் 2வது படமான ஜப்பான் படம் தீபாவளி ரிலீசாக வரும் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.

கார்த்தியின் ஜப்பான் படம்: நடிகர் கார்த்தி, அனு இமானுவேல் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள ஜப்பான் படம் வரும் நவம்பர் 10ம் தேதி தீபாவளி ரிலீசாக திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. கார்த்தியின் 25வது படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்குநர் ராஜூ முருகன் இயக்கியுள்ளார். படத்தில் கார்த்தியுடன் அனு இமானுவேல், இயக்குநர் மில்டன், சுனில் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் தயாரித்துள்ளது.
இயக்குநர் ராஜூ முருகன்: திருச்சியில் நடைபெற்ற உண்மை சம்பவங்களில் அடிப்படையில் இந்தப் படத்தை ராஜூ முருகன் இயக்கியுள்ளார். இந்தப் படம் வரும் நவம்பர் 10ம் தேதி தீபாவளி ரிலீசாக திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் டீசர், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.
ஜப்பான் படத்தின் இசை வெளியீடு: நிகழ்ச்சியில் கார்த்தி உள்ளிட்ட படக்குழுவினருடன் நடிகர் சூர்யா, விஷால், ஆர்யா, சத்யராஜ், சிபிராஜ், தமன்னா உள்ளிட்டவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர். மேலும் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், பா ரஞ்சித், ஹெச் வினோத், சிவா உள்ளிட்டவர்களும் பங்கேற்று சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் பேசிய கார்த்தி, நடிகர்களுக்கு உண்மையான அன்பு அம்மா, நண்பர்கள், மனைவிக்கு பிறகு ரசிகர்களிடம்தான் அதிகமாக கிடைப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
கார்த்தியின் பேச்சு: தான் திரைத்துறையில் கடந்த 20 ஆண்டுகளாக பயணித்து வருவதாகவும் இதுவரை 25 படங்களில் நடித்து முடித்துள்ளதாகவும் கார்த்தி மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். தனக்கு நடிப்பை சொல்லிக் கொடுத்த இயக்குநர் அமீருக்கும் கார்த்தி நன்றி தெரிவித்துக் கொண்டார். தான் இதுவரை எந்த இயக்குநரிடமும் கதை இருக்கிறதா என்று கேட்டதில்லை என்றும் ஜப்பான் பட இயக்குநர் ராஜூ முருகனிடம்தான் தனக்கான கதை இருக்கிறதா என்று முதல் முறையாக கேட்டதாகவும் கார்த்தி குறிப்பிட்டிருந்தார்.

சென்சார் நிறைவு: இன்னும் சில தினங்களில் ரிலீசாகவுள்ள இந்தப் படத்தின் சென்சார் தற்போது நிறைவடைந்துள்ளது. படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியான நிலையில் தற்போது படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நடிகர் நானி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











