Actor Karthi: கார்த்தி படத்தின் இசை வெளியீடு எப்ப தெரியுமா.. சூர்யா பங்கேற்க வாய்ப்பு!
சென்னை: நடிகர் கார்த்தியின் ஜப்பான் படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் ராஜூ முருகன். படம் தீபாவளி ரிலீசாக வெளியாகவுள்ளது.
இந்தப்படத்தின் டீசர் உள்ளிட்டவை வெளியாகி மாஸ் காட்டியுள்ள நிலையில், அடுத்ததாக படத்தின் இசை வெளியீட்டை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
கார்த்தியின் ஜப்பான் பட இசை வெளியீடு குறித்த அப்டேட்: நடிகர் கார்த்தியின் 25வது படமாக ஜப்பான் படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை பிரபல இயக்குநர் ராஜூ முருகன் இயக்கியுள்ளார். படத்தின் டீசர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், படத்தின் பாடல்களும், பிஜிஎம்மும் ரசிகர்களுக்கு சிறப்பான விருந்தளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் தீபாவளி ரிலீசாக வெளியாகவுள்ளது.

படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்துள்ளார். இயக்குநர் மில்டன் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ளன. மேலும் சென்னை ஈசிஆரில் 200 குடிசைகள் போடப்பட்டு பிரம்மாண்டமான செட்டில் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இந்தப் படத்தில் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஒரு பாடலை பாடியுள்ளார்.
இதையொட்டி கடந்த சில வாரங்களுக்கு முன்பு தன்னுடைய மகிழ்ச்சியை ஜிவி பிரகாஷ் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். படத்தின் மெலடி பாடலை ஷான் ரோல்டன் பாடியுள்ளதாகவும், அபாரமான அவரது குரலில உருவாகியுள்ள அந்தப் பாடல் தன்னுடைய இசை வாழ்க்கையில் மறக்க முடியாத பாடலாக அமைந்துள்ளதாகவும், அவரது குரலை பதிவு செய்ததில் மிகுந்த மகிழ்ச்சி என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீடு இந்த மாத இறுதியில் நடத்தப்பட உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக அக்டோபர் 28ம் தேதி இந்த இசை வெளியீடு சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் பகிரப்பட்டுள்ளது. தற்போது கங்குவா படத்தின் சூட்டிங்கிற்காக தாய்லாந்தில் உள்ள நடிகர் சூர்யாவும், படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு வரும் பட்சத்தில் கார்த்தியின் ஜப்பான் பட இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்று கூறப்பட்டுள்ளது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது ஜப்பான் படம். சமீபத்தில் இந்தப் படத்தின் டப்பிங் குறித்த வீடியோவை நடிகர் கார்த்தி வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து, 6 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றது. தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இந்தப் படத்தை தொடர்ந்து 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்திலும் அவர் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications