காசி திரையரங்கில் ரசிகர்களுடன் இணைந்து சர்தார் படம் பார்த்த கார்த்தி.. சூப்பர் வரவேற்பு!
சென்னை : நடிகர் கார்த்தியின் சர்தார் படம் இன்றைய தினம் தீபாவளியையொட்டி திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது.
கார்த்தியின் விருமன், பொன்னியின் செல்வன் வெற்றிகளை தொடர்ந்து கார்த்தியின் சர்தார் படமும் அவருக்கு வெற்றியை தேடித் தந்துள்ளது.
இந்த மூன்று படங்களுமே மூன்று வித்தியாசமான திரைக்கதைகளுடன் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

நடிகர் கார்த்தி
வித்தியாசமான கதைக்களங்களில் தன்னுடைய படங்கள் வெளியாவதை விரும்பும் நடிகர்களில் கார்த்தி முன்னணியில் இருக்கிறார். ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய கேரக்டர்களை வித்தியாசமாக தேர்ந்தெடுத்து அதில் தன்னுடைய சிறப்பான நடிப்பையும் சேர்த்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

சிறப்பான கைதி படம்
அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி கார்த்தியின் வித்தியாசமான பரிணாமத்தை வெளிக்காட்டியது. அழுக்கு லுங்கியுடன் ஆயுள் தண்டனை கைதியாக தண்டனையை அனுபவித்துவிட்டு தன்னுடைய மகளை பார்க்கும் ஆசையுடன் பயணத்தை துவங்கும் இவரது கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அடுத்தடுத்த வெற்றிகள்
தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான விருமன், பொன்னியில் செல்வன் படங்களும் அதிரி புதிரி வெற்றியை கார்த்திக்கு பெற்றுத் தந்தன. இதனிடையே இன்றைய தினம் இவரது சர்தார் படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரி மற்றும் வயதான கேரக்டர்களில் நடித்துள்ளார் கார்த்தி.

வரவேற்பை பெற்றுள்ள சர்தார் படம்
இந்தப் படமும் தற்போது மிகச்சிறப்பான விமர்சனங்களை பெற்று வருகிறது. ரசிகர்கள் இந்தப் படத்தையும் கொண்டாடி வருகின்றனர். அடுத்தடுத்து ஒரு மாத இடைவெளிகளில் விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் படங்கள் திரையரங்குகளில் ரிலீசாகி கார்த்திக்கு வெற்றியை பெற்றுத் தந்துள்ளன.

ரசிகர்களுடன் படம் பார்த்த கார்த்தி
இதனிடையே இன்று வெளியாகியுள்ள சர்தார் படத்தை சென்னை காசி திரையரங்கில் சென்று ரசிகர்களுடன் பார்த்து மகிழ்ந்துள்ளார் கார்த்தி. இதையடுத்து வெளியில் வந்த அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். படம் சூப்பர் என்றும் கமெண்ட்ஸ்களை தெரிவித்தனர். இதனால் உற்சாகமடைந்த கார்த்தி அவர்களுடன் கைக்குலுக்கி மகிழ்ந்தார்.

ராஜு முருகனுடன் கைக்கோர்க்கும் கார்த்தி
தற்போது அடுத்தடுத்த வெற்றிகளை கொடுத்துள்ள கார்த்தி அடுத்ததாக ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் படத்தில் இணையவுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் தீபாவளியை அடுத்து துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியலை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகவுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











