மெய்யழகன் படத்தின் நீளம் குறைப்பு.. அட இவ்வளவு நிமிட காட்சிகளை நீக்கிட்டாங்களா?
சென்னை: நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது மெய்யழகன் படம். முன்னதாக 96 என்ற ட்ரெண்ட் செட்டர் படத்தை கொடுததுள்ள இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது.
படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் கொடுக்கப்பட்ட நிலையிலும் படத்தின் நீளம் அதிகமாக இருபபதாகவும் இரண்டாவது பாதியில் நடிகர் கார்த்தி பேசிக் கொண்டே இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், இதையொட்டி படக்குழுவினர் அதிரடி சரவெடியான முடிவை எடுத்துள்ளனர்.

மெய்யழகன் படம்: நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள மெய்யழகன் படம் நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாக கடந்த 27ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது. முன்னதாக 96 என்ற ட்ரெண்ட் செட்டர் படத்தை கொடுத்து கோலிவுட்டில் மிகப்பெரிய கவனத்தை பெற்றிருந்த இயக்குநர் பிரேம்குமார் 6 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தை இயக்கியிருந்த நிலையில் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த எதிர்பார்ப்பை மெய்யழகன் படம் சிறப்பாகவே பூர்த்தி செய்தது. குடும்ப உறவுகளின் மகத்துவத்தை பேசுவதாக இந்தப் படம் அமைந்திருந்தது.
படத்தின் நீளம் குறைப்பு: கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் நீளம் ஏறக்குறைய 3 மணிநேரங்களாக இருந்த நிலையில், இடைவேளைக்கு பிறகு கார்த்தி வளவளவென பேசிக் கொண்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இந்தப் படத்தை மேலும் கிரிஸ்ப்பாக ரசிகர்களுக்கு கொடுக்கும்வகையில் படக்குழுவினர் தற்போது அதிரடி முடிவை எடுத்துள்ளனர். இதையடுத்து படத்தின் நீளத்தை 18 நிமிடங்கள் குறைத்துள்ளனர். இதுகுறித்து படத்தின் இயக்குநர் பிரேம்குமார் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். மெய்யழகனை உணர்ந்து புரிந்துக் கொண்ட பெரும்பாலானவர்களின் அன்பும் ரசனையும் பிரமிக்க வைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பிரேம்குமார் அறிவிப்பு: மேலும் படத்தின் நீளம் குறித்த அக்கறை குரல்கள் வெளிப்பட்ட நிலையில், எல்லோரது திருப்தியை கவனத்தில் கொண்டு, இன்று முதல் படத்தின் சில காட்சிகள் நீக்கப்பட்டு 2 மணிநேரம் 38 நிமிடங்களாக படத்தின் திரையிடல் தொடரும் என்றும் அவர் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மெய்யழகனின் நீளம் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அவன் பேசும் அன்பும் திரையனுபவமும் சற்றும் குறையவில்லை என்றும் அவர் மேலும் தெளிவுப்படுத்தியுள்ளார். சூர்யா, கார்த்தி, உள்ளிட்ட அனைவரும் முதல் சந்திப்பு முதல் இன்றுவரை தன்னை அரவணைத்து வருவதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிரேம்குமார் பாராட்டு: மேலும் தனக்கு முழுமையான படைப்பு சுதந்திரத்தை இவர்கள் கொடுத்த நிலையில், தற்போது இந்த நேரக் குறைப்பு செய்யும் தனது முடிவுக்கும் அவர்கள் துணை நிற்பதாகவும் பிரேம்குமார் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார். முன்னதாக பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான 96 படத்திலும் உணர்வுப்பூர்வமாக கதைக்களத்தை அணுகியிருந்தார் பிரேம்குமார். அதிலும் கதாநாயகன் மற்றும் கதாநாயகி தங்களது உணர்வுகளை வார்த்தைகளாலேயே தெரிவிப்பார்கள். அதேபோன்ற ஒரு உணர்வுப்படைப்பையே தற்போது மெய்யழகன் படத்திலும் கொடுக்க முயன்றுள்ளார். படத்தின் நீளம் தற்போது குறைக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் திரைக்கதை ரசிகர்களை கவருமா என பொருத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











