Karthi: உங்களை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்.. நடிகர் கார்த்தி கூல்!

சென்னை: நடிகர் கார்த்தியின் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி அவரது ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்து வருகின்றது.

சமீபத்தில் கார்த்தி உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படம் ரசிகர்களின் வரவேற்பை வெகுவாக பெற்றது.

அடுத்ததாக கார்த்தி ஜப்பான் படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தை ராஜூ முருகன் இயக்கியுள்ளார். தீபாவளி ரிலீசாக இந்தப் படம் ரிலீசாகவுள்ளது.

Actor Karthis new Instagram post and pictures gets more likes from Fans

நடிகர் கார்த்தியின் புதிய இன்ஸ்டாகிராம் பதிவு: நடிகர் கார்த்தியின் திரைப்பயணம் கடந்த 2007ம் ஆண்டில் பருத்தி வீரனில் துவங்கியது. அதுமுதல் டைரக்டர்களின் சாய்சாக தொடர்ந்து இருந்து வருகிறார் கார்த்தி. தன்னுடைய முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஃபிலிம்பேர் விருது, தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருது, சிறந்த அறிமுக நடிகருக்கான விஜய் விருது என பெற்றார். எந்தவிதமான கேரக்டராக இருந்தாலும் அதை தன்னுடைய நடிப்பின்மூலம் சிறப்பாக்கி வருகிறார் கார்த்தி.

கடந்த ஆண்டில் கார்த்தி நடிப்பில் அடுத்தடுத்து 3 படங்கள் வெளியாகி சூப்பர்ஹிட் கொடுத்தன. விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் படங்கள் வித்தியாசமான ஜானர்களில் வெளியாகி வசூல்சாதனை புரிந்தன. இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 படம் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு சர்வதேச அளவில் வெளியாகி கார்த்திக்கு சிறப்பாக அமைந்தது. அடுத்ததாக ராஜூ முருகன் இயக்கத்தில் ஜப்பான் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் கார்த்தி.

தீபாவளி ரிலீசாக வெளியாகவுள்ள ஜப்பான் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. கார்த்தியின் 25வது படம் என்ற பெருமையுடன் உருவாகியுள்ள ஜப்பான் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை ஹிட் படங்களாக்கிவரும் கார்த்திக்கு ஜப்பான் படமும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

கார்த்திக்கு படத்தில் அனு இம்மானுவேல் ஜோடியாகியுள்ளார். கடந்த ஆண்டில் தீபாவளி ரிலீசாக கார்த்தியின் சர்தார் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த ஆண்டு தீபாவளியிலும் அவரது ஜப்பான் படம் வெளியாகவுள்ளது. சினிமாவில் மட்டுமில்லாமல் பொதுவெளியிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறார் கார்த்தி. தன்னுடைய அறக்கட்டளை சார்பில் பல விஷயங்களை முடுக்கி விட்டு வருகிறார்.

சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக காணப்படும் கார்த்தி, தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்யூட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். கேப்ஷன் மூலம் ரசிகர்களுக்கும் மெசேஜ் ஒன்றை கடத்தியுள்ளார். உங்களிடம் நீங்கள் எப்போதும் அன்பாக இருங்கள் என்றும் கூறியுள்ள கார்த்தி, உள்ளபடியே உங்களை ஏற்றுக் கொண்டு, தொடர்ந்து உங்கள் செயல்பாடுகளில் நடைபோடுங்கள் என்றும் கூறியுள்ளார். கார்த்தியின் இந்தப் பதில் வெளியான சில மணிநேரங்களிலேயே 2 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X