Karthi 30 movie: டாணாக்காரன் இயக்குநருடன் இணையும் கார்த்தி.. கேங்ஸ்டர் கதைக்களத்தில் கார்த்தி30 படம்!

சென்னை: நடிகர் கார்த்தி அடுத்தடுத்த முன்னணி இயக்குநர்களுடன் இல்லாமல் இளம் இயக்குநர்களின் படங்களிலும் இணைந்து மாஸ் ஹிட் கொடுத்து வருகிறார். கார்த்தியின் கதைத்தேர்வு மிகச்சிறப்பானது என்றும் அவர் ஒரு கதையை ரிஜெக்ட் செய்தால் ரிஸ்க் எடுத்து அதில் நடிக்கக் கூடாது என்று முன்னணி நடிகர் ஒருவரும் பாராட்டு தெரிவித்திருந்தார்.

தற்போது வா வாத்தியார் மற்றும் மெய்யழகன் படங்களில் நலன் குமாரசாமி மற்றும் பிரேம்குமார் இயக்கங்களில் நடித்துள்ளார் கார்த்தி. இந்தப் படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து சர்தார் 2 படத்திலும் இணைந்துள்ளார் கார்த்தி. இந்தப் படங்களை தொடர்ந்து அவர் தனது கார்த்தி30 படத்திலும் தற்போது கமிட்டாகியுள்ளார்.

Karthi Taanakkaran movie tamil cinema

நடிகர் கார்த்தி: நடிகர் கார்த்தி இளம் இயக்குநர்கள், முன்னணி இயக்குநர்கள் என்ற பேதமில்லாமல் தன்னுடைய கேரக்டருக்கு எந்தவகையில் ஒரு கதை முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு தன்னுடைய படங்களை தேர்ந்தெடுக்கிறார். தற்போது வா வாத்தியார் மற்றும் மெய்யழகன் என கார்த்தி நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இதில் மெய்யழகன் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக இந்தப் படத்தின் ரிலீசை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். கடந்த ஆண்டில் பொன்னியின் செல்வன் 2 மற்றும் ஜப்பான் என அடுத்தடுத்த படங்களில் நடித்திருந்தார் கார்த்தி.

அடுத்தடுத்த படங்கள்: பொன்னியின் செல்வன் 2 படம் கார்த்திக்கு சிறப்பாக கைக்கொடுத்த நிலையில், ஜப்பான் படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்க தவறியது. கடந்த ஆண்டு தீபாவளியையொட்டி வெளியான இந்தப் படம் மிகப்பெரிய தோல்வியை கார்த்திக்கு கொடுத்துள்ளது. இந்நிலையில் அடுத்ததாக அவரது மெய்யழகன் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை அவரது அண்ணன் சூர்யா தன்னுடைய 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார். இந்தப் படத்தை 96 என்ற அழுத்தமான காதல் கதையை கொடுத்த பிரேம்குமார் இயக்கியுள்ளார்.

கார்த்தி 30 படம்: இந்தப் படத்தை போலவே நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியார் படத்தின் சூட்டிங்கும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து சர்தார் 2 படத்திலும் கார்த்தி இணைந்துள்ளார். இந்தப் படத்தின் பூஜை போடப்பட்டு சூட்டிங்கும் துவங்கப்பட்டுள்ளது. இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக கார்த்தி கமிட்டாகியுள்ள கார்த்தி 30 படத்தின் தகவல்களும் வெளியாகியுள்ளன. முன்னதாக விக்ரம்பிரபு உள்ளிட்டவர்கள் நடிப்பில் டாணாக்காரன் என்ற ஹிட் படத்தை கொடுத்திருந்த தமிழ் இயக்கத்தில் இந்தப் படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளார். கேங்ஸ்டர் கதைக்களத்தில் இந்தப் படம் உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பீரியட் கேங்ஸ்டர் படம்: கடந்த 1960களில் நடப்பதாக பீரியட் படமாக கார்த்தி 30 படம் உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது இந்தப் படத்தின் ப்ரீ புரொடக்ஷன்ஸ் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப் படத்தின் பூஜை, சூட்டிங் உள்ளிட்டவை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். சரியான இடைவெளிகளில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களை சரியான திட்டமிடலுடன் கமிட் செய்து வருகிறார் கார்த்தி. அதனால்தான் பல ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து வெற்றிநாயகனாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X