Actor Karthi: பிப்ரவரி 2ம் தேதி கார்த்தியின் சர்தார் 2 பட பூஜை.. வில்லனாக களமிறங்கும் சூப்பர் ஹீரோ!
சென்னை: நடிகர் கார்த்தியின் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான ஜப்பான் படம் அவருக்கு கைக்கொடுக்கவில்லை. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக கார்த்தி 26 மற்றும் கார்த்தி 27 படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி. குறிப்பாக பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி 27 படத்தின் சூட்டிங்கில் மும்முரம் காட்டி வருகிறார். இந்தப் படம் கார்த்தி கேரியரில் மிகச்சிறப்பாக அமையும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 96 என்ற அருமையான படத்தை கொடுத்த பிரேம்குமார் இந்தப் படத்தில் கார்த்தியை வித்தியாசமாக காட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இதனிடையே நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி இணைந்துள்ள கார்த்தி 26 படத்தின் சூட்டிங்கும் மறுபுறம் நடக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டில் வெளியான சர்தார் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான வேலைகளும் மும்முரப்படுத்தப்பட்டுள்ளன. படத்தின் சூட்டிங் மற்றும் பூஜை குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், படத்தில் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் முதல் பாகத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் கார்த்தி: நடிகர் கார்த்தி அடுத்தடுத்த படங்களில் சிறப்பாக கமிட்டாகி நடித்து வருகிறார். முன்னதாக அவரது விருமன், சர்தார், பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2 படங்கள் வெளியாகி அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தன. இந்நிலையில் கடந்த ஆண்டில் வெளியான ஜப்பான் படம் அவருக்கு சிறப்பாக அமையவில்லை. படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்நிலையில் தற்போது நலன் குமாரசாமி மற்றும் பிரேம்குமார் இயக்கத்தில் அடுத்தடுத்து கார்த்தி 26 மற்றும் கார்த்தி 27 படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி. இதில் கார்த்தி 27 படத்தில் அதிக மும்முரம் காட்டி வருகிறார். படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.
எதிர்பார்ப்பில் கார்த்தி 27: கார்த்தி 27 படம் ரசிகர்களிடையே அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக 96 என்ற படத்தை கொடுத்த பிரேம்குமார் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். 96 படத்தில் அழகான காதலை கதைக்களமாக கொடுத்திருந்த பிரேம்குமார், இந்தப் படத்தில் குடும்ப உறவுகளை மையமாக கொண்டு படத்தை இயக்கி வருவதாக கூறப்படுகிறது. கார்த்தியின் கேரியரில் இந்தப் படம் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து 40 நாட்கள் நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடி இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்தார் 2 படத்தின் பூஜை: படத்தில் அரவிந்த் சாமி முக்கியமான கேரக்டரில் நடித்துவரும் நிலையில், படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அடுத்ததாக சர்தார் 2 படத்தின் சூட்டிங்கிலும் கார்த்தி இணையவுள்ளார். இந்தப் படத்தின் பூஜை சென்னையில் வரும் பிப்ரவரி 2ம் தேதி நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் படத்தின் சூட்டிங் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் துவங்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தற்போது நடித்துவரும் பிரேம்குமார் படத்தின் சூட்டிங்கை அதற்குள்ளாக கார்த்தி முடித்துவிடுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
சர்தார் 2வில் யுவன் இசை: ஆனால் அதற்குள்ளாக நலன் குமாரசாமி படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்வது சற்று கடினம்தான் இதனால் சர்தார் 2 மற்றும் கார்த்தி 26 படங்களிலே ஒரே நேரத்தில் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சர்தார் 2 படம் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள சூழ்நிலையில் படத்தின் அதற்கேற்ப நடிகர், நடிகைகள் இணைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. படத்தின் இயக்குநர் பிஎஸ் மித்ரன், இந்தப் படத்தையும் வெற்றிப்படமாக கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம். முதல் பாகத்தில் படத்தின் இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் செயல்பட்ட நிலையில், தற்போது இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராக இணைந்துள்ளார்.
வில்லனாக விஜய் சேதுபதி?: படத்தின் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. படத்தில் ராஷி கண்ணாவே நாயகியாக நடிப்பாரா, இந்தப் படத்திலும் இரட்டை வேடங்களில் கார்த்தி நடிப்பாரா என்பது குறித்து அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். படத்தை முதல் பாகத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. இந்தப் படமும் மிகுந்த பொருட்செலவில் உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











