Actor Karthi: சைலண்டாக நடந்து முடிந்த கார்த்தியின் சர்தார் 2 பட பூஜை.. எப்ப சூட்டிங் தெரியுமா?
சென்னை: நடிகர் கார்த்தி அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்களுடனும் இளம் இயக்குநர்களுடனும் பாகுபாடின்றி இணைந்து சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். கார்த்தியின் கதை தேர்வு மிகவும் சிறப்பானது என்று சக நடிகர்களே பாராட்டும் அளவிற்கு கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் கார்த்தி.
கடந்த ஆண்டில் பொன்னியின் செல்வன் 2 மற்றும் ஜப்பான் படங்கள் கார்த்தி நடிப்பில் வெளியாகின. இந்த படங்களை தொடர்ந்து தற்போது மெய்யழகன் மற்றும் வா வாத்தியார் படங்களில் நடித்து முடித்துள்ளார் கார்த்தி. இந்நிலையில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ள சர்தார் 2 படத்தின் பூஜை இன்றைய தினம் சென்னையில் எளிமையாக போடப்பட்டுள்ளது.

நடிகர் கார்த்தி: நடிகர் கார்த்தி அடுத்தடுத்து சிறப்பான இயக்குனர்களுடன் கைகோர்த்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். கார்த்தியின் கதை தேர்வு மிகவும் சிறப்பானது என்றும் அவர் வேண்டாம் என்று ஒதுக்கும் படங்களில் நடிக்கக்கூடாது என்றும் அது கண்டிப்பாக ப்ளாப்பாகும் என்றும் சக நடிகர்களே பாராட்டும்வகையில் கார்த்தியின் கதைத்தேர்வு காணப்படுகிறது. தொடர்ந்து விருமன் உள்ளிட்ட படங்களை ஹாட்ரிக் வெற்றியாக கொடுத்த கார்த்திக்கு, கடந்த ஆண்டில் தீபாவளி ரிலீசாக வெளியான ஜப்பான் படம் சொதப்பலாக அமைந்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது மெய்யழகன் மற்றும் வா வாத்தியார் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் கார்த்தி.

அடுத்தடுத்த படங்கள்: இந்த படங்கள் இந்த ஆண்டிலேயே அடுத்தடுத்து ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 2022ஆம் ஆண்டில் வெளியாகி மிகச் சிறப்பான வெற்றியை கொடுத்திருந்த சர்தார் படத்தின் 2வது பாகம் உருவாக உள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் இந்த படத்தின் பூஜை சென்னையில் நடத்தப்பட்டுள்ளது. இதில் நடிகர் கார்த்தி, இயக்குனர் பிஎஸ் மித்ரன் மற்றும் கார்த்தியின் அப்பா நடிகர் சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். படத்தின் சூட்டிங் வரும் 15ம் தேதி துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

யுவன் சங்கர் ராஜா இசை: சர்தார் படத்தில் கார்த்தி அப்பா மற்றும் மகன் என இருவேறு கேரக்டர்களில் நடித்திருந்தார். இந்நிலையில் இரண்டாவது பாகத்தின் கதைக்களம் எப்படி அமையும் என்பது குறித்து ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள சர்தார் 2 படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், சங்கி பாண்டே, லைலா, முனிஷ்காந்த், யூகிசேது உள்ளிட்ட நடிகர்கள் இணைந்துள்ளனர். இவர்கள் முதல் பாகத்திலும் நடித்திருந்தனர். முதல் பாகத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்த நிலையில், இரண்டாவது பாகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றமாக யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராக இணைந்துள்ளார்.
15ம் தேதி சூட்டிங்: சென்னையில் வரும் 15ம் தேதி படத்தின் முதல்கட்ட சூட்டிங் துவங்கவுள்ள நிலையில், இதற்காக பிரம்மாண்டமான செட்கள் அமைக்கும் வேலைகள் தற்போது நடந்து வருகிறது. கடந்த 2022ம் ஆண்டில் தீபாவளியையொட்டி வெளியான சர்தார் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது. இதே போல சர்தார் 2 படமும் ரசிகர்களை சிறப்பாக கவரும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











