Actor Karthi: ஜூன் மாதத்தில் துவங்கும் சர்தார் 2 படத்தின் சூட்டிங்.. கதை என்ன தெரியுமா?

சென்னை: நடிகர் கார்த்தியின் ஜப்பான் படம் கடந்த ஆண்டு தீபாவளியை ஒட்டி வெளியானது. இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் வெளியான சூழ்நிலையில் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்தப்படத்தை தொடர்ந்து தற்போது கார்த்திக் 26 மற்றும் கார்த்திக் 27 படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி. இந்த இரு படங்களின் சூட்டிங் விரைவில் நிறைவடையுள்ள சூழலில் அடுத்ததாக சர்தார் 2 படத்தின் ஷூட்டிங்கில் இணையவுள்ளார் கார்த்தி.

கார்த்திக் 26 மற்றும் கார்த்திக் 27 படங்களை நலன் குமாரசாமி மற்றும் பிரேம்குமார் இயக்கி வருகின்றனர். படங்களுக்கு வா வாத்யாரே மற்றும் மெய்யழகன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். அடுத்தடுத்து முன்னணி தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து நடித்து வரும் கார்த்தி, தன்னுடைய அண்ணன் சூர்யாவின் தயாரிப்பிலும் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.

Actor Karthi s Sardar 2 movie shooting starts on June month it seems

நடிகர் கார்த்தி: நடிகர் கார்த்தி: நடிகர் கார்த்தி தொடர்ந்து அடுத்தடுத்து தேர்ந்தெடுத்து கேரக்டர்களில் தேர்ந்தெடுத்த இயக்குனர்களுடன் கூட்டணி அமைத்து அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்துக் வருகிறார். கடந்த ஆண்டில் கார்த்தி நடிப்பில் பொன்னியின் செல்வன் 2 மற்றும் ஜப்பான் படங்கள் வெளியாகின. இதில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படம் கார்த்திக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. மல்ட்டி ஸ்டாரர் படமாக இருந்தபோதிலும் இந்தப் படத்தில் கார்த்தி அதிகமாக ஸ்கோர் செய்திருந்தார். முன்னதாக இந்தப் படத்தின் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

சொதப்பிய ஜப்பான் படம்: இதையடுத்து கடந்த தீபாவளியையொட்டி ராஜுமுருகன் இயக்கத்தில் ஜப்பான் படம் ரிலீசானது. இந்தப்படம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் வெளியான சூழ்நிலையில் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதையடுத்து தற்போது கார்த்தி 26 மற்றும் கார்த்திக் 27 படங்களில் நலன் குமாரசாமி மற்றும் பிரேம்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இந்த படங்களுக்கு வா வாத்தியாரே மற்றும் மெய்யழகன் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் இதன் இதன் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே அடுத்ததாக சர்தார் 2 படத்தில் இணையவுள்ளார் கார்த்தி.

சர்தார் 2 படத்தின் சூட்டிங்: இதுகுறித்து அறிவிப்பு முன்னதாக வெளியான சூழலில் அடுத்த மாதம் இறுதியில் இந்த படத்திற்கான பூஜை போடப்பட உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து ஜூன் மாதத்தில் படத்தின் சூட்டின் துவங்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் கதைக்களம் போதைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் இந்தப் படமும் முதல் பாகத்தை போலவே ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கலாம். படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்கிரிப்ட் ரெடி: பிஎஸ் மித்ரன் மற்றும் கார்த்தி கூட்டணியில் கடந்த 2022ம் ஆண்டில் வெளியானது சர்தார் படம். இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் கார்த்தி. இந்த இரட்,டை வேடங்களிலும் சிறப்பாக ஸ்கோர் செய்திருந்தார் கார்த்தி. இதன் திரைக்கதை மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்த சூழலில் இரன் இரண்டாவது பாகம் குறித்து தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். கடந்த பிப்ரவரி மாதத்திலேயே இந்தப் படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளை மித்ரன் நிறைவு செய்ததாகவும் இதற்கான எளிமையான பூஜை முன்னதாகவே போடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X