Sardar2: சர்தார் 2 படத்தின் வேலைகளை துவங்கிய படக்குழு.. என்னது வில்லன் இவரா?

சென்னை: நடிகர் கார்த்தி -பிஎஸ் மித்ரன் கூட்டணியில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீசாகி சூப்பர் ஹிட்டான படம் சர்தார்.

படத்தில் ராஷி கண்ணா, ரிஜிஷா விஜயன், லைலா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். பாலிவுட் நடிகர் சங்கி பாண்டே வில்லனாக மிரட்டியிருந்தார்.

படம் விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. 100 கோடி ரூபாய் கிளப்பிலும் இணைந்திருந்தது.

கார்த்தியின் சர்தார்2 பட வேலைகள் துவக்கம்: நடிகர் கார்த்தி தொடர்ந்து வித்தியாசமான ஜானர்களில் தன்னுடைய படங்களை கொடுத்து வருகிறார். கைதி படத்தில் நிஜமான கைதியாகவே மிரட்டிய அவர், விருமன் படத்தில் கிராமத்து கெட்டப்பில் மாஸ் காட்டினார். சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்திலும் வந்தியத் தேவனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு தீபாவளியையொட்டி வெளியான கார்த்தியின் சர்தார் படம் ஸ்பை ஆக்ஷன் படமாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

படத்தில் கார்த்தியுடன் ராஷி கண்ணா, ரிஜிஷா விஜயன், லைலா, யூகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். பாலிவுட் நடிகர் சங்கி பாண்டே இந்தப் படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். சர்தார் படத்தில் நடிகர் கார்த்தியின் நடிப்பு பரவலாக பாராட்டுக்களை பெற்றது.

விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் இந்தப் படம் மிகப்பெரிய ரீச்சை ரசிகர்களிடையே பெற்றது. இந்தப் படத்துடன் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படமும் கடந்த தீபாவளிக்கு ரிலீசான நிலையில், அந்தப் படத்தை ஓரம்கட்டி சர்தார் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 100 கோடி ரூபாய் கிளப்பிலும் இணைந்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான வேலைகளை தற்போது மித்ரன் துவங்கியுள்ளார்.

Actor Karthis Sardar movie second part works starts and seems to be VJS joined as a villain

முதல் பாகத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்த நிலையில், இரண்டாவது பாகத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார். மேலும் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டில் கார்த்தி நடிப்பில் சர்தார், விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் படங்கள் வெளியான நிலையில், மூன்று படங்களும் அவருக்கு சிறப்பாக அமைந்தது. குறிப்பாக சர்தார்.

முன்னதாக இரும்புத்திரை, ஹீரோ படங்களை எடுத்திருந்த பிஎஸ் மித்ரன், சர்தார் படத்தின்மூலம் தண்ணீர் பிரச்சினையை கதைக்களமாக எடுத்திருந்தார். படத்தில் சீக்ரெட் ஏஜெண்டாக அப்பா கேரக்டரில் நடித்திருந்தார் கார்த்தி. ஒரு கட்டத்தில் வில்லனின் ஆட்டத்தை அப்பா கார்த்தி மற்றும் போலீஸ் அதிகாரியாக வரும் மகன் கார்த்தி இருவரும் இணைந்து எப்படி முறியடிக்கின்றனர் என்பதாக இந்தக் கதைக்களம் காணப்பட்டது. இந்நிலையில், இரண்டாவது பாகத்தில் எந்தமாதிரியான கதைக்களத்தை மித்ரன் எடுப்பார் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X