twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா லாக்டவுனால் வேலை இல்லை.. வறுமையை விரட்ட காய்கறி வியாபாரத்தில் இறங்கிய மேலும் ஒரு நடிகர்!

    By
    |

    மும்பை: கொரோனா லாக்டவுன் காரணமாக ஏற்பட்ட வறுமையால், மேலும் நடிகர் ஒருவர் காய்கறி வியாபாரி ஆகி இருக்கிறார்.

    கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடுமையாக மிரட்டி வருகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தினமும் உயர்ந்து வருகிறது.

    இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    மூக்கில் டியூப்.. எப்படி இருக்கிறார் விஜயலக்ஷ்மி.. தீயாய் பரவும் சிகிச்சைப் பெறும் போட்டோ! மூக்கில் டியூப்.. எப்படி இருக்கிறார் விஜயலக்ஷ்மி.. தீயாய் பரவும் சிகிச்சைப் பெறும் போட்டோ!

    லாக்டவுன்

    லாக்டவுன்

    இருந்தும் இதன் காரணமாக உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மிரட்டும் இந்த கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த 4 மாதங்களாக லாக்டவுன் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றனர். தினசரி வேலை பார்த்து சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் அவதிக்கு உள்ளாகினர். இப்போது சில பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

    காய்கறி வியாபாரம்

    காய்கறி வியாபாரம்

    பலர் தங்கள் தொழிலை மாற்றியுள்ளனர். சினிமா தொழிலாளர்களும் சின்ன சின்ன வேடங்களில் நடித்துவருபவர்களும் வாழ்வாதாரத்துக்காக வேறு வேலைகளில் இறங்கியுள்ளனர். மராத்தி மற்றும் இந்தி நடிகர்கள் சிலர் காய்கறி வியாபாரம் செய்து தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றி வருகின்றனர். இந்நிலையில் மேலும் ஒரு இந்தி நடிகர் காய்கறி வியாபாரியாக மாறி இருக்கிறார்.

    அமிதாப்பச்சன்

    அமிதாப்பச்சன்

    ஒடிசா மாநிலம் கரத்பூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகா சஹூ (Kartika Sahoo). தனது 17 வயதில் பாலிவுட் சினிமாவில் நடிப்பதற்காக மும்பை சென்றார். அமிதாப்பச்சன் உள்பட சில நடிகர்களுக்கும் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களுக்கும் பாதுகாவலராக பணியாற்றினார். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான லேடி லக் என்ற படம் மூலம் நடிகர் ஆனார்.

    நடிகர் அக்‌ஷய் குமார்

    நடிகர் அக்‌ஷய் குமார்

    இதற்கிடையே கொரோனாவால் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது. இதனால் வாழ்வாதாரத்தை இழந்த கார்த்திகா சஹூ தற்போது சொந்த ஊரான ஒடிசாவுக்கு திரும்பி, காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இதுபற்றி அவர் கூறும்போது, அக்‌ஷய்குமார் நடிப்பில் ரிலீஸ் ஆகவுள்ள 'சூரியவன்ஷி' படத்தில் சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளேன். மார்ச் 22 ஆம் தேதி படபிடிப்பு முடிந்தது.

    மருத்துவ செலவு

    மருத்துவ செலவு

    உடனடியாக சொந்த ஊரான ஒடிசா திரும்பினேன். மருத்துவ செலவுக்காக, என்னிடம் இருந்த சேமிப்பு கரைந்து விட்டது. தலைநகர் புவனேஸ்வர் வந்து வேலை தேடினேன். கிடைக்கவில்லை. உடனே காய்கறிகளை விற்பனை செய்து வருகிறேன். நம்பிக்கையை இழக்கவில்லை. நிலைமை மீண்டும் சகஜமானவுடன் நடிப்பதற்கு செல்வேன் என்று கூறியுள்ளார்.

    English summary
    Kartika Sahoo, a Bollywood actor who will also be seen in Akshay Kumar's Sooryavanshi, has now started selling vegetables due to the COVID-19 pandemic.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X