Don't Miss!
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Automobiles ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- News ஆஸ்திரேலியாவில் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்.. கெட்டதிலும் நடந்த ஒரு நல்ல விஷயம்
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
டெடிக்குள் இருந்தது பையனா? பொண்ணா? சூப்பரா டீகோட் பண்ணும் பிரபல நடிகரின் மகள்.. வைரலாகும் வீடியோ!
சென்னை: டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ள நடிகர் ஆர்யாவின் டெடி திரைப்படம் குழந்தைகளுக்கு ரொம்பவே பிடித்து விட்டது.
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஏற்ப ஹாலிவுட் ஸ்டைலில் இந்த முறையும் ஒரு பக்காவான படத்தை இயக்குநர் சக்தி செளந்தர் ராஜன் இயக்கி உள்ளார்.
3 மாறுபட்ட கேரக்டர்களில் விஜய்...தளபதி 65 அடுத்த அப்டேட்டும் வெளியானது
இந்நிலையில், டெடி திரைப்படத்தை பார்த்த நடிகர் கருணாகரனின் மகள் டீகோட் செய்யும் அழகான வீடியோவை இயக்குநர் சக்தி செளந்தர் ராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
சாயிஷா ஆவி
சாகாமல் கோமாவுக்கு சென்ற சாயிஷாவின் ஆவி எப்படி டெடிக்குள் செல்கிறது என்கிற லாஜிக் எல்லாம் பார்த்து டைம் வேஸ்ட் பண்ணாமல், டெடி பியர் செய்யும் க்யூட்டான அட்டகாசங்களை குழந்தைகள் எந்தவொரு ஏழாம் அறிவும் இல்லாமல் அழகாக கண்டு ரசிக்கின்றனர். நம்ம ஆளு நிலவுலையே ராக்கெட்டை லேண்ட் பண்ணவராச்சே!
குழந்தைகளின் ஃபேவரைட்
டெடி ரைம்ஸ், டெடி வரும் காட்சிகள் அனைத்தும் குழந்தைகள் ரசிக்கும் படி அழகாக படமாக்கி இருக்கிறார் இயக்குநர் சக்தி செளந்தர் ராஜன். கூடவே பெரியவர்கள் படத்தை பார்க்க மருத்துவ மாஃபியாவையும் இலவச இணைப்பாக இணைத்துள்ளார். தியேட்டரில் படம் வெளியாகி இருந்தால், குழந்தைகள் பெற்றோர்களை நிச்சயம் நச்சரித்து தியேட்டர்களுக்கு அழைத்துச் சென்று இருப்பார்கள்.
கருணாகரன் மகள் டீகோடிங்
பொதுவாக இது போன்ற படங்களில் அதிகமாக சிஜி வேலைகள் இடம்பெற்று இருக்கும். ஆனால், டெடி படத்தை பார்த்த அனைவருமே, படம் இவ்ளோ தத்ரூபமாக இருக்கே, டெடி பியருக்குள்ள யார் இருந்தா? என்கிற கேள்வியை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், டெடி படத்தில் நடித்துள்ள நடிகர் கருணாகரன் மகள் செய்துள்ள டீகோடிங் வீடியோ வைரலாகி வருகிறது.
|
பையனா? பொண்ணா?
ஜிகர்தண்டா, இன்று நேற்று நாளை, டெடி உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களில் காமெடி நடிகராக கலக்கி வரும் நடிகர் கருணாகரனின் மகள், டெடி பொம்மைக்குள்ள யாரோ இருக்காங்க, ஒரு பையனோ இல்லை ஒரு பொண்ணோ இருந்து தான் இப்படி நடிச்சிருக்காங்கன்னு க்யூட்டா சொல்ல, பையன் தான்மான்னு கருணாகரன் பேசும் வீடியோவை இயக்குநர் சக்தி செளந்தர் ராஜன் ஷேர் செய்துள்ளார்.
|
பிக் பாஸ் சுஜா மகன்
நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான சுஜா வருணி தனது குட்டிப் பையன் டெடி படத்தை பார்த்து வீட்டில் உள்ள டெடி பியருடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை நடிகர் ஆர்யாவுக்கு டேக் செய்துள்ளார். நடிகர் ஆர்யாவும் சுஜாவின் வீடியோவை பார்த்து இது ரொம்ப க்யூட் என பதிவிட்டுள்ளார். குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட படமாக ஆர்யாவின் டெடி வெற்றிநடை போடுகிறது.