திடீர் மரணம்.. நடிகர் கருணாகரன் வீட்டில் சோகம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சென்னை: நகைச்சுவை நடிகர், குணசித்திர நடிகருமான நடிகர் கருணாகரனின் தந்தை இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 77. உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் உயிர் பிரிந்தது.
தமிழ் திரையுலகில் கவனிக்கத்தக்க காமெடி நடிகராக வலம் வருபவர், கருணாகரன். பல துணை கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தாலும், இவருக்கு பெரிய புகழை தேடித் தந்த திரைப்படம் சூது கவ்வும் நளன் குமாரசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன், ராதாரவி மற்றும் எம். எஸ். பாஸ்கர் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்திருந்தனர். இந்த படத்தின் இயக்குநர் நளன் குமாரசாமியை குறும்படம் படத்திற்காக சந்தித்த போது, கருணாகரனுக்கு இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நடிகர் கருணாகரன்: இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, யாமிருக்க பயமே,ஜிகர்தண்டா, நண்பேன்டா, நேற்று இன்று நாளை, ஹலோ நான் பேய் பேசறேன், இறைவி, கோ 2, ஒரு நாள் கூத்து, தொடரி என அடுத்தடுத்து வெற்றி படத்தில் நடித்து தற்போது ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்ற நடிகராக விளங்கி வருகிறார். கருணாகரன் சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே சுமார் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். கடந்த ஆண்டில் மட்டும் இவர் நடித்த 6 திரைப்படங்கள் வெளியானது.
உயிரிழந்தார்: இந்நிலையில், நடிகர் கருணாகரனின் தந்தையும், கேபினட் செயலக சிறப்புப் பிரிவின் ஓய்வுபெற்ற அதிகாரியான காளிதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 77. இந்த துயரமான செய்தியை நடிகர் கருணாகரன் கனத்த இதயத்தொடு பகிர்ந்துள்ளார். தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்து 37 ஆண்டுகள் சேவையாற்றிய என் தந்தை இன்று உயிரிழந்தார்.

இவரின் இறுதிச்சடங்கு இன்று மாலை 3 மணி அளவில் பெசன்ட் நகரில் நடைபெற உள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் குடும்பத்தின் தனியுரிமைக்கு மதிப்பளித்து, செய்தியாளர் குழுவை அனுப்புவதைத் தவிர்க்குமாறு ஊடகங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என நடிகர் கருணாகரன் ஊடகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications