twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “பஜ்ஜி, வடை சாப்பிடதான் லாயக்கு”: தயாரிப்பாளர் சங்கத்தை சல்லி சல்லியாக உடைத்த கருணாஸ்

    |

    சென்னை: சல்லியர்கள் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

    இதில், நடிகர் கருணாஸ், இயக்குநர்கள் வெற்றிமாறன், சீனுராமசாமி உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

    அப்போது பேசிய கருணாஸ் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளை கடுமையாக விமர்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட்ட சல்லியர்கள் டீசர்...எப்படி இருக்கு ? கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட்ட சல்லியர்கள் டீசர்...எப்படி இருக்கு ?

    சல்லியர்கள் ஆடியோ ரிலீஸ்

    சல்லியர்கள் ஆடியோ ரிலீஸ்

    கருணாஸ், களவாணி புகழ் திருமுருகன், மகேந்திரன் ஆகியோர் நடித்துள்ள படம் சல்லியர்கள். மேதகு என்ற டைட்டிலில் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து கவனம் பெற்ற கிட்டு சல்லியர்கள் படத்தை இயக்கியுள்ளார். கல்லூர் பேராசிரியராக வேலை பார்த்து வந்த கிட்டு, தற்போது இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவர் தற்போது இயக்கியுள்ள சல்லியர்கள் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குநர்கள் வெற்றிமாறன், சீனுராமசாமி, கருணாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    கருணாஸ் பேச்சு

    கருணாஸ் பேச்சு

    சல்லியர்கள் படத்துக்கு கருணாஸின் மகன் நடிகர் கென், அவரது நண்பர் ஈஸ்வர் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார். ஆடியோ வெளியீட்டில் பேசிய கருணாஸ், "நான் துபாயில் இருந்தபோது இயக்குநர் கிட்டு என்னை அழைத்தார். மாவீரர் பிறந்தநாளில் சல்லியர்கள் படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தினால் நன்றாக இருக்கும் என்றார். அதனால் உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்ட விழா தான் இது. இத்திரைப்படத்தில் என் மகனுடன், அவரது நண்பர் ஈஸ்வரை இசையமைப்பாளராக அறிமுகம் செய்து வைக்கிறேன். கென் கருணாஸ் இசையமைப்பாளராக பணியாற்றினாலும் அவர் நடிகராக வரவேண்டும் என்பதே எனது ஆசை" என்றார்.

    தயாரிப்பாளர்கள் சங்கம் மீது தாக்கு

    தயாரிப்பாளர்கள் சங்கம் மீது தாக்கு

    தொடர்ந்து பேசிய கருணாஸ், "தமிழ்நாட்டில் விஷூவல் கம்யூனிகேஷன் படித்த மாணவர்களுக்கு ஏற்ற தளம் கிடைப்பதில்லை. ஒவ்வொரு வருடமும் 2 ஆயிரத்து 500 மாணவர்கள் விஷூவல் கம்யூனிகேஷன் படித்து வெளியே வருகின்றனர். இவர்களுக்கு தமிழ் சினிமாவில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்கங்கள் தான் உதவ வேண்டும்; ஆனால், அவர்கள் உதவாமல் பஜ்ஜி, வடை சாப்பிட்டுக் கொண்டிருககிறார்கள்" என கடுமையாக தாக்கி பேசினார்.

    பிச்சை எடுப்பேன்

    பிச்சை எடுப்பேன்

    மேலும், "1985 முதல் என்னால் முடிந்த உதவிகளை ஈழத் தமிழர்களுக்கு செய்து கொண்டிருக்கிறேன். 153 அகதி மாணவர்களை நான் செலவு செய்து படிக்க வைத்திருக்கிறேன். இன்று அவர்கள் நல்ல வேலையில் இருக்கிறார்கள். இதுபோன்ற ஒரு கட்டமைப்பை உருவாக்கி, அதை என் மகன் கென், அவனது நண்பர் ஈஸ்வர் போன்றவர்களிடம் ஒப்படைக்க போகிறேன். அவர்கள் அதை பார்த்துக் கொள்ளட்டும், இது தான் என்னுடைய நோக்கம். அதற்கு பணம் தேவைப்பட்டால், பத்து பேரிடம் பிச்சை எடுத்தாவது கொடுப்பேன்" என்று கருணாஸ் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Actor Karunas and many other celebrities attended the music launch of the Salliyargal film. Speaking then, Karunas severely criticized the Producers Association.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X