நடிகர் கருணாஸ்க்கு கொரோனா தொற்று.. வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்!
சென்னை: நடிகர் கருணாஸ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் வீட்டிலேயே தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்.
Recommended Video
கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் திரைத்துறை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

கடந்த மாதம் நடிகை ஐஸ்வர்யா அர்ஜூன், நடிகர் விஷால் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தனர். நேற்று பிரபல பாடகரான எஸ்பி பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் மற்றொரு பிரபலமான
நடிகர் கருணாஸ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் கருணாஸ் திண்டுக்கல்லில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வரும் நடிகர் கருணாஸ், கடைசியாக திரௌபதி படத்தில் வழக்கறிஞராக நடித்தார். நடிகர் கருணாஸ் திருவாடனைக்காவல் தொகுதி எம்எல்ஏவாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











